தமிழக வாகன ஓட்டிகளே இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! தமிழக அரசிதழில் வெளியான அறிவிப்பு!

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும்  புதிய விதிகளை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.  மேலும், இதனை அரசு இதழிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இனி, * Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவத்தை கண்காணித்தல், * விபத்தை தவிர்த்தல், * விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  * அதிக வேகம், * ஹெல் மெட் / சீட் பெல்ட் … Read more

கள்ளச்சாராய மரணம் 22 ஆக அதிகரிப்பு! திமுக அமைச்சருக்கு நெருங்கியவர் மீது குண்டர் சட்டம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.  விஷச்சாராயத்தை அருந்தி செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜம்பு, சங்கர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.  இதற்கிடையே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, கள்ளச்சாராய மரண வழக்குகள் … Read more

இதற்கெல்லாம் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா? இபிஎஸ்-க்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து (16.05.2023 – 11 pm) தற்போது வரை 22 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருவதற்கு தலா ரூ.50000 நிதி உதவியும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவருக்கும் தமிழக அரசு ரூ.50000 நிதி உதவி வழங்கிய கூத்தும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயத்தால் 22 … Read more

டாஸ்மாக் சாராயம், கள்ளச்சாராயம் புனிதமானதா? டிஜிபி-யின் விளக்கம் நகைப்பு! அன்புமணி இராமதாஸ் விளாசல்!

கள்ளச்சாராயம் புனிதமானது அல்ல…. எல்லா சாராயங்களின் விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் எட்டியார்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை என்றும்,  விஷச் சாராயம் தான் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம் வியப்பாகவும், நகைப்பாகவும் உள்ளது. அது … Read more

திமுக கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா குண்டாசில் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ள சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மரக்காணத்தைச் சேர்ந்த அமரனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமரனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் கள்ளச்சாராய வியாபாரி முத்துவை போலீசார் தேடி வந்தனர். இதற்காக சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் முத்துவை தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசார் முத்துவை இன்று காலை 10 … Read more

#தூத்துக்குடி || லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து – 20 பயணிகள் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எட்டையப்புரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற லாரியின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முன்பகுதி சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு … Read more

21 பேரின் உயிரிழப்புக்கு காரணம் திமுக நிர்வாகி & அமைச்சர் செஞ்சி மஸ்தான் – அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மதுராந்தகம், மரக்காணம் கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றனர். முப்பதுக்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, தமிழகம் முழுவதும் 1558 கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து, பல ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தைப் பறிமுதல் செய்திருக்கிறது தமிழக காவல் துறை. இத்தனை … Read more

கள்ளச்சாராயம் அல்ல அது விஷச்சாராயம் | டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்!

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் இல்லை என்றும், அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் (ஸ்பிரிட்) என்று காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும், மெத்தனால் என்ற … Read more

கதவை திறந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி – ஈரோட்டில் பரிதாபம்.!

கதவை திறந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி – ஈரோட்டில் பரிதாபம்.! ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா மகன் பிரவீன். இவர் கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், பிரவீன் வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தன் தந்தையின் மளிகைக் கடைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பிரவீன் நேற்று காலை வழக்கம்போல் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் … Read more

மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் ஈபிஎஸ்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் 40க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை பெற்றுவருபவர்களின் … Read more