#குரோம்பேட்டை: அரசு பேருந்து மோதி விபத்து – 10 பேர் காயம்

குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசியில் இருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சிக்னலில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து மீது எதிர்பாராதவிதமாக திடீரென்று அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஓட்டுநர், காலில் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் … Read more

12ம் வகுப்பு துணைத் தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – தேர்வுத்துறை அறிவிப்பு.!

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழகத்தில் கடந்த 8ம்தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் … Read more

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..!! இணையத்தில் பார்த்து எப்படி.??

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கல்வித்துறை அறிவிப்பு.! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022-2023-ம் கல்வியாண்டிற்கான பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் … Read more

தமிழகத்தையே அதிர வைத்த கள்ளச்சாராய விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு..!

கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் பேரம்பாக்கத்தில் போலி மது அருந்திய 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் … Read more

தமிழகத்தில் இன்று 108.14 டிகிரி வெயில் பதிவு! 16 இடங்களில் சதம்! வானிலை மையம் கொடுக்கும் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி, சென்னை – 105.44 டிகிரி, புதுச்சேரி- 102.92 டிகிரி, திருத்தணி – 105.8 டிகிரி, கரூர் பரமத்தி – 104.9 டிகிரி, பரங்கிப்பேட்டை – 104.36 டிகிரி, ஈரோடு – 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் – 103.28 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி – 103.1 டிகிரி, கடலூர் – 102.92 … Read more

சென்னை | 5,000 குடும்பங்கள் வெளியேற்ற தமிழக அரசு தீட்டிய திட்டம்! வெளியான அதிர்ச்சி செய்தி!

பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை மேம்படுத்துவதற்கான/ மறுசீரமைப்பதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுமார் 2.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும். முதற்கட்டமாக 1200 குடும்பங்கள் வெளியேற்ற … Read more

அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்! தமிழக மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு! 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி: மதுரை. திருச்சி, திருநெல்வேலி. கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், … Read more

100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.! பெண் பலி, 21 பேர் காயம்.!

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 22 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சுற்றுலா வந்துவிட்டு, அங்கிருந்து வேனில் பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தவன் 5வது கொண்டை ஊசி வளைவில் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 22 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். … Read more

#BREAKING:: மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்த அமரன் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததால் தற்பொழுது வரை 11 பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சுமார் 60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் … Read more

#திருநெல்வேலி || கிரிக்கெட் விளையாடியபோது பரிதாபம்.! கிணற்றில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய 10ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 10ஆம் வகுப்பு மாணவன் முகமது அப்சர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்பொழுது கிரிக்கெட் பந்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்ததால், முகமது அப்சர் உட்பட 4 பேர் கிணற்றில் குதித்து பந்தை எடுக்க முயன்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக … Read more