விழுப்புரத்தை உலுக்கிய கோர சம்பவம்.. 88 சாராய வியாபாரிகள் கைது..!! தமிழக காவல்துறை அதிரடி..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால் வலி எண்ணிக்கை 7ஆக தற்பொழுது உயர்ந்துள்ளது. சிலரின்உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மதுவிலக்கு காவல் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.!

நடபாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடபாண்டிற்கான 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும். Source link

அண்டிப் பிழைத்து, கூலிக்கு மாரடிக்கும் விசிக – திருமாவளவனுக்கு பாஜக தரப்பில் பதிலடி!

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்ள வேண்டும் என்று, திருமாவளவன் கூறியதற்கு, பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். பாஜக கூட்டணியை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மறுபரிசலினை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும் கர்நாடக தேர்தல் முடிவுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகவும் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பிரித்தாலும் சூது, சூழ்ச்சி நீண்ட காலம் கை கொடுக்காது என்பதற்கும், கர்நாடக மக்களின் தீர்ப்பு ஒரு … Read more

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்! அதிமுகவிற்கு நெருக்கடியை கொடுக்கும் அறிக்கை!

பாஜக கூட்டணி வேண்டாம் என்று, அதிமுகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்த அவரின் அறிக்கையில், “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.  அம்மாநிலத்தின் பாஜகவின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து மக்கள்  வீழ்த்தி உள்ளனர்.  இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் விசிக. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம்.  பிரசாரம் செய்யப்பட்ட 11 … Read more

நாமக்கல் : இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி  விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.!

நாமக்கல் : இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி  விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தன்-நித்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நித்யா கடந்த மார்ச் மாதம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அனால், அன்று மாலை ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்த நிலையில், நித்யா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் விவேகானந்தன், நித்யா … Read more

குற்றாலத்தில் குவிக்கப்பட்ட போலீசார் – நடந்தது என்ன?

குற்றாலத்தில் குவிக்கப்பட்ட போலீசார் – நடந்தது என்ன? தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்றடி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவர் கேரளாவிலிருந்து பழங்கள் கொண்டு வந்து, மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே சுடலை உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சுடலை இன்று சுடலை மாடன் கோவில் அருகே உள்ள தோப்பு பகுதிக்கு சென்று விட்டு, ஒருமரத்தின் அடியில் அமர்ந்துள்ளார். அப்போது அவரை … Read more

கலப்பட டாஸ்மாக் மது! செங்கல்பட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே பேரம்பாக்கத்தில் மது அருந்திய வெண்ணியப்பன் – சந்திரா தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதால் தம்பதிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகிய நிலையில், மேலும் அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில், கலப்பட மது குடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், உதவி காவல் ஆய்வாளர்கள் … Read more

#விழுப்புரம் :: மரக்காணம் கள்ளச்சாராய பலி 6 ஆக உயர்வு.!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஒட்டியுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சுரேஷ் ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று காலை உயிரிழந்தனர். மேலும் கலாச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் … Read more

விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்.. கள்ளச்சாராய பலி 5ஆக உயர்வு..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சுரேஷ் ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று காலை உயிரிழந்தனர். மேலும் கலாச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு தல 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தும், உடல் … Read more

செங்கல்பட்டு : மது குடித்த மாமியார், மருமகன் பிணமாக மீட்பு – நடந்தது என்ன?

செங்கல்பட்டு : மது குடித்த மாமியார், மருமகன் பிணமாக மீட்பு – நடந்தது என்ன? செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா மகள் அஞ்சலை. இவருக்கும் சின்னத்தம்பி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே வசந்தா, அவரது மகள் அஞ்சலை மற்றும் மருமகன் சின்னத்தம்பி என்று மூன்று பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே … Read more