விருதுநகர் : நீட் தேர்வு பயம்.. மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகள் காவியா (வயது 19). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 476 மதிப்பெண்கள் பெற்றார். இதில் மாணவி காவியாவிற்கு டாக்டராக வேண்டும் என்பது லட்சியம். அதன் காரணமாக 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு நீட் தேர்வுக்கு தயரானார். இதற்காக பயிற்சி வகுப்பிற்கும் சென்று படித்து வந்துள்ளார். இதில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் … Read more

சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 7 சிறுவர்கள் – 5 பேர் மீட்பு.!!

சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 7 சிறுவர்கள் – 5 பேர் மீட்பு.!! சென்னையில் உள்ள ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு சிறார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் மொத்தம் பதின்மூன்று சிறார்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழு சிறுவர்கள் நேற்று முன்தினம் மையத்திலிருந்து தப்பி … Read more

தேனி : மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!

தேனி : மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..! தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணாத்தாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தன்ராஜன் – சூர்யகலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கந்தன் ராஜனுக்கும், அவரது மனைவி சூர்யகலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தத் தகராறு இருவருக்கிடையே கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யகலா தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் தனியாக இருந்த கனகராஜன் மாமியார் இல்லத்திற்குப் … Read more

மதுரையில் பரபரப்பு : அரசு பேருந்தில் இருந்து மாணவரை கீழே தள்ளி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.! 

மதுரையில் பரபரப்பு : அரசு பேருந்தில் இருந்து மாணவரை கீழே தள்ளி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.!  மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் மகன் மோகன் பிரபு. இவர், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்குவதற்காக கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அங்கு அவர், சிங்காநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சீரநாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அந்த … Read more

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ், அருண். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதனுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.  அப்போது திடீரென சிறுவர்களை காணவில்லை. அவர்கள் சென்ற மிதிவண்டி மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் … Read more

விடுமுறை நாட்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க கூடாது – போக்குவரத்துக்கழகம் உத்தரவு..!!

விடுமுறை நாட்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க கூடாது – போக்குவரத்துக்கழகம் உத்தரவு..!! தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து கழகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். இதற்கு காரணம், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது தான். அதுமட்டுமல்லாமல், … Read more

கிரானைட் கொள்ளையர்களுக்கு துணைபோகும் தமிழக அரசு! மன்னிக்க முடியாத குற்றம் – கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின்  உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மற்றும் கருங்கற்கள் விதிகளை மதிக்காமல் சட்டவிரோதமாக … Read more

குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!!

குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!! விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி மதுபோதையில் தனது பதின்மூன்று வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் மது போதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு பாலியல் … Read more

தூத்துக்குடி : கண்மாயில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.!

தூத்துக்குடி : கண்மாயில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ், அருண். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதனுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.  அப்போது திடீரென சிறுவர்களை காணவில்லை. அவர்கள் சென்ற மிதிவண்டி மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை … Read more

மனைவி இறந்த சோகம்.. விவசாயி விபரீத முடிவு.. மதுரையில் பரிதாபம்..!

மதுரை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மொக்கை(47). இவரது மனைவி கடந்த ஆண்டு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் வீட்டில் வசித்து வந்த மொக்கை, மனைவி இறந்த துக்கத்தில் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மொக்கை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக … Read more