ரூட் போட்டு கொடுத்த காவலர்.. சிக்கிய பரபரப்பு ஆடியோக்கள்.. தட்டி தூக்கிய காவல்துறை..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைதான கோவையை சேர்ந்த ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பந்தைய சாலை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் ஸ்ரீதர் மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆஷிக் ஆகிய இருவரும் கஞ்சா கடத்தலில் உதவியதாக விசாரணை கைதிகள் தெரிவித்தனர். காவல்துறையினர் … Read more

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.! பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமாள் (30). இவர் உறவினரான முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது பெருமாள் அழைத்துச்சென்ற முதியவருக்கு புறநோயாளிகள் பிரிவில் பெண் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த பெருமாள் பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பெண் மருத்துவர் கூச்சலிடவே, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் … Read more

6 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வாலிபர்கள் கைது.!

6 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வாலிபர்கள் கைது.! திருவாரூரில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி மண்டல வன பாதுகாவல் அலுவலர் சதீஷுக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் படி திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் என்ற பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது, அந்தவழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சந்தேகப்படும் விதமாக வந்துள்ளனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை … Read more

உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தாயாகி  சேவை வாய்ப்பு செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர்  இராமதாஸ், மருத்துவப் பணியாற்றும் மனித தேவதைகளுக்கு செவிலியர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், “உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தாயாகி  சேவை வாய்ப்பு செவிலியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.  மருத்துவர்களுடன் இணைந்து நோயர்களைக் காக்கும் மனித தேவதைகள் அவர்கள். மற்றவர்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து செவிலியர்களுக்கும்  உலக  செவிலியர் நாளில் எனது  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி … Read more

அடித்தது ஜாக்பாட்.. ஒப்பந்தம் போட்டாச்சு.. திருவண்ணாமலையில் ராயல் என்ஃபீல்டு ஆலை..!!

மக்கள் பெரும்பாலும் வாங்க விரும்ப கூடிய இருசரக்கர வாகனத்தில் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனங்கள் இல்லாமல் இருக்காது. தோற்றத்திலும் வடிவத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவது வழக்கம்.  ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளது. அதன்படி தமிழகத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் … Read more

குரூப் 1​ உத்தேச வினா விடை குறித்த விவகாரம் – டிஎன்பிஎஸ்சிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

குரூப் 1​ உத்தேச வினா விடை குறித்த விவகாரம் – டிஎன்பிஎஸ்சிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை.! திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த லஷ்மணகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தமிழகத்தில் கடந்த 21.07.2022 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த 19.11.2022 … Read more

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் – போக்சோவில் கைது.!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் – போக்சோவில் கைது.! மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலைப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் பக்கத்து வீட்டில் இருக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சிறுவன் அந்த சிறுமியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் ரீதியான அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். … Read more

தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையா? தமிழக ஆளுநர் மாளிகை கடும் எச்சரிக்கை!

“பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக பரவும் தகவலை நம்ப வேண்டாம்” என்று ஆளுநர் மாளிகை சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், பீகார் மாநில நபரின் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பரவும் தகவல் பொய்யானது. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று … Read more

48 மணி நேரம் மட்டுமே கெடு.. மே15-ல் சாலை மறியல் போராட்டம்.. அண்ணாமலையின் அதிரடி..!!

தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு எழுதியவர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் … Read more

ஈபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அதிமுகவினர்..!

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்துகள் கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  மேலும் சேலம் மாவட்ட அதிமுக சார்பில்  69 கிலோ கேக் மற்றும் நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த 200 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 125 … Read more