மெட்ரோவில் வேலைவாய்ப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் – மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.!

மெட்ரோவில் வேலைவாய்ப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் – மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.! சமீபத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. தற்போது இந்தத் தகவலை நம்ப வேண்டாம் என்றும், அது வதந்தி என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு … Read more

தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட போலீசார் – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட போலீசார் – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! சென்னையில் உள்ள அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் காவலர் வள்ளிநாயகம். இவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், எஸ்.ஐ முருகன் மற்றும் ரோந்து வாகன காவலர் வள்ளி நாயகம் உள்ளிட்டோர் கடந்த 5-ம் தேதி இரவு ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அனைவரையும் ஆவடி … Read more

நீச்சல் குளத்தில் இடைவிடாது சிலம்பம் சுற்றி.. 11 வயது தமிழக சிறுவன் உலக சாதனை.!

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தன ராஜா ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 11 வயதில் ராஜமுனீஸ்வர் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் கடந்த சில ஆண்டுகளாக தனியார் விளையாட்டு அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார். இதில் நீச்சலிலும் அதிக ஆர்வம் உள்ளதை அறிந்த சிறுவனின் பயிற்சியாளர் நீச்சல் அகாடமியில் சேர்த்து சிறுவனுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டது. … Read more

#BREAKING || "மோக்கா புயல்"… தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு செல்ல வேண்டாம் – அமைச்சர் அறிவுறுத்தல்

தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை “மோக்கா” புயலாக வலுப்பெற்று, போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.  அதன் பிறகு, நாளை காலை … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாநிலை … Read more

#கோவை || மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்..!

கோவை மாவட்டத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மகன் சீனிவாசன்(25) கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் விபத்தில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையறிந்த … Read more

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைவு – எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!

மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது என்று, ஓ பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் இணைந்தது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் டிடிவி தினகரனை துரோகி என்று கூறினார், டிடிவி தினகரன் ஓபிஎஸ்-யை துரோகி என்று தெரிவித்தார். இந்த இரண்டு துரோகிகளும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். துரோகிகள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்? ஓ பன்னீர்செல்வம் ஒரு ஜீரோ, டிடிவி தினகரன் ஒரு ஜீரோ, ஆக ஜீரோ … Read more

மத்திய அரசின் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு போட்டி தேர்வுகள், வங்கி தேர்வுகள் மற்றும் குடிமை பணிகள் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக தமிழக அரசு சிறந்த பயிற்சி … Read more

கள்ளக்குறிச்சி : மனவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

கள்ளக்குறிச்சி : மனவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோ. வன்னஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மகள் விஜயா. இவர் பல்லகச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், முருகன் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி விஜயா … Read more

நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கௌரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மே 9ம் தேதி முதல் மே 16ஆம் தேதி … Read more