ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்… மளிகை கடைக்காரர் கைது…!

சேலம் மாவட்டத்தில் ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கட்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (51). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு ஷாம்பு வாங்குவதற்காக 10 வயது சிறுமி வந்துள்ளார். அப்பொழுது யாரும் இல்லாததால் கருப்பண்ணன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு சென்ற சிறுமி, … Read more

மாநில கல்வி கொள்கை ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்க மாநில கல்விக் கொள்கை குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில கல்வி கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர் நேசன் திடீரென இன்று ராஜினாமா செய்து உள்ளார். இது குறித்து பேசி அவர் தேசிய கல்விக்கொள்கையின் பாதையிலும் தனியார் கார்பரேட் கல்விக்கொள்கையின் திசையிலும் மாநிலக் கல்விக்கொள்கையை கொண்டு செல்ல சில அதிகாரிகள் முனைப்புக் … Read more

வரும் மே 31ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கரூர் வைகாசி மாத பெருவிழாவை முன்னிட்டு மே 31ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மே 31ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் … Read more

கல்லூரி செல்வதற்காக சுடிதாரை அயன் செய்த மாணவி – மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! 

கல்லூரிக்கு செல்வதற்காக சுடிதாரை அயன் செய்த மாணவி – மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் அருகே பிள்ளமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்வேதா இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு அவசரம் அவசரமாக புறப்பட்டுள்ளார்.  அந்த நேரத்தில் ஸ்வேதா, சுடிதாரை அயன் செய்வதற்காக ஈரக் கையுடன் அயன்பாக்ஸை தொட்டுள்ளார். அப்போது, அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், தூக்கி … Read more

வக்காலத்து வாங்குவது சந்தர்ப்பவாதம் தானே? ஆளும் திமுகவை விமர்சிக்க பயந்த பா ரஞ்சித்க்கு பதிலடி கொடுத்த பாஜக! 

பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் இந்த பணியினை மனிதர்கள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதோடு சட்ட விரோதமும் கூட. ஆனாலும், இந்த அவல நிலை நீடிக்க காரணம் ஆண்டவர் ராமரா? ஆளும் அரசா? ஆள்பவரை விமர்சிக்க பயந்து கொண்டு ஆண்டவரை விமர்சிப்பது ஏன் என்பது தான் கேள்வி.  மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தவும், அம்மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக … Read more

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் செல்லுங்கள் – தமிழக அரசுக்கு ஆலோசனை கூறும் மார்க்சிஸ்ட்!

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார்.  இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் … Read more

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், “1 .12 .2019 தேதி முதல் பெறுகின்ற ஊதியத்தில் ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க நிர்வாகத்தின் சார்பிலும், தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோல இரண்டாவதாக அதே தேதியில் 10 ஆண்டுகள் பணி செய்து முடித்த ஊழியர்களுக்கும், மற்ற அலுவலர்களுக்கும் பணி பலனாக … Read more

கன்னியாகுமரி : வீட்டின் உள்ளே உயிரிழந்து கிடந்த பாதிரியார் – போலீசார் தீவிர விசாரணை.!

வீட்டின் உள்ளே உயிரிழந்து கிடந்த பாதிரியார் – போலீசார் தீவிர விசாரணை.! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெனீஷ். இவர் அதேபகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே ஆலயத்தில் போதகராக இருந்து வருகிறார். திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் அருகிலுள்ள வீடுகளுக்கு தினமும் சென்று ஜெபம் செய்தும் வந்தார்.  இந்நிலையில் ஆஸ்டின் ஜெனீஷின் வீடு கடந்த இரண்டு நாட்களாகவே திறக்கப்படவில்லை. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் போதகர் வீட்டில் ஜன்னல் வழியாக … Read more

ஓபிஎஸ்-யை தொடர்ந்து அவரின் மகனுக்கும் ஆப்பு! பரபரப்பு மனு!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இதற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவுகளின் படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.  அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் … Read more

சென்னை மக்களே… மொபைல் சார்ஜ் போட மறக்காதீங்க.. நாளை காலை முதல் மின்வெட்டு..!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்வெட்டு செய்யப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பம்மலின் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்ய திட்டமிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைந்து முடித்தால் மதியம் 2 மணிக்குள் மின் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை எச்.எல்.காலனி, பாம்பொன் நகர், நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், … Read more