மத துஷ்பிரயோக பேச்சு! விடுதலை சிவப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில், கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து தரக்குறைவாக விடுதலை சிகப்பி பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. மலக்குழி விவகாரத்தில் ஆளும் ஆட்சியர்களை விமர்சிக்க முடியாத விரக்தியில், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் கடவுள்களை இழிபடுத்தி இப்படியான சம்பவம் நடைபெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் கண்டன குரல் எழுந்தது.  இதுகுறித்த ஆதாரத்துடன் விடுதலை சிவப்பி மீது தமிழக காவல்துறை தலைவர் (டி ஜி பி) மற்றும் சென்னை நகர காவல் … Read more

#ராமநாதபுரம் : டிரான்ஸ்பார்மர் மீது மோதி சுற்றுலா பஸ் விபத்து – 41 பேர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுற்றுலா பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது 41 பேர் காயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் சுற்றுலா பேருந்தில் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் பகுதியில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். இதையடுத்து அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது முத்தாதிபுரம் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையோரம் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதி … Read more

அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்!

கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.  திமுகாவிரின் சொத்து பட்டியலில், ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரம் கோடி, எ.வ.வேலு – ரூ.5 ஆயிரம் கோடிகே.என்.நேரு – ரூ.2,495 கோடி, கனிமொழி- ரூ.830 கோடி, கலாநிதிமாறன் – ரூ.12 ஆயிரம் கோடி, உதயநிதி – ரூ.2 ஆயிரம் கோடி, சபரீசன் – ரூ.902 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38 ஆயிரம் கோடி சொத்து … Read more

தமிழகத்தில் இனி 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் நடக்கும் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு.!

தமிழகத்தில் இனி 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் நடக்கும் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு.! தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகே வாகை மரத்திடலில் தமிழக அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் வெங்கடேன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “தமிழக முதலமைச்சர் 24 மணி … Read more

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.! தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவான இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தப் நாளை மேற்குவங்க மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த பாதிப்பும், … Read more

அடுத்து என்ன? சென்னையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :  நீங்கள் எப்போது சசிகலாவை சந்திப்பீர்கள்? சசிகலாவை சந்திக்க நீங்கள் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி உள்ளாரா? ஓபிஎஸ் : சின்னம்மா அவர்களை கூடிய விரைவில் சந்திப்பேன். செய்தியாளர் :  ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய குடும்ப நலனுக்காக யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது பற்றி … Read more

தமிழக அமைச்சரவை மாற்றம் | நாசர் நீக்கம்! டிஆர்பி ராஜா அமைச்சராகிறார்!

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் நாசர்நீக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் டிஆர்பி ராஜா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொழில்துறை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 11ஆம் தேதி காலை 10:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகபரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சர் … Read more

கல்வெட்டில் பெயர் இல்லாததால் போராட்டம் நடத்திய மதுரை துணை மேயர்.!

கல்வெட்டில் பெயர் இல்லாததால் போராட்டம் நடத்திய மதுரை துணை மேயர்.! மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜனுக்கும் கடந்த சில மாதமாகவே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் மேயர் இந்திராணி பேசியதாவது:-   “மாநகராட்சி வார்டுகளில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் தன்னுடைய பெயரை திட்டமிட்டே சேர்க்கப்படுவதில்லை என்றும், மாநகராட்சி விழாக்கள், கூட்டங்களுக்கு தன்னை அதிகாரிகள் முறைப்படி அழைப்பதில்லை என்றும், மாநகராட்சி நிர்வாகப்பணிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் … Read more

சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்டதால் உரிமையாளரை வெளுத்து வாங்கிய கும்பல் – 4 பேர் கைது.!

சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்டதால் உரிமையாளரை வெளுத்து வாங்கிய கும்பல் – 4 பேர் கைது.! சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் தேவி என்ற பெண் பானிபூரி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நான்கு பேர் கொண்ட கும்பல்  பானி பூரி சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். அதன் படி அவர்கள் பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்துள்ளனர்.  இதனால் தேவிக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அதிகரித்ததால், ஆத்திரத்தில் அந்த வாலிபர்கள் … Read more

என் மகனுக்கு நல்லாவே நீச்சல் தெரியும்; அவன் எப்படி இறக்க முடியும் – கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்த தந்தை.!

என் மகனுக்கு நல்லாவே நீச்சல் தெரியும்; அவன் எப்படி இறக்க முடியும் – கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்த தந்தை.! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, சின்னமுட்டில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பல்லவ். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள குள்ளப்புரம் பகுதியில் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், இவர் தன் சக நண்பர்களோடு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது … Read more