சர்வேதச மாஃபியா கும்பலுடன் தொடர்பு… திமுக ஊராட்சி மன்ற தலைவரை தட்டி தூக்கிய போலீஸ்!

நாகையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை மகாலிங்கம் இருந்து வருகிறார். இவர் போதை பொருள் கடத்தலில் இலங்கை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்த நிலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லியில் வாகன … Read more

#BigBreaking | அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது! 

தமிழக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை, சென்னை பொழிந்தோப்பு காவல்துறையினர் சற்று முன்பு கைது செய்துள்ளனர். பெண் ஒருவரை மிரட்டிய புகாரின் பேரில் தற்போது அமைச்சரின் மருமகன் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதிஷ் கைது!#DMK #Minister #SekarBabu #Chennai #Tamilnadu pic.twitter.com/uATSSYaL8n — Seithi Punal (@seithipunal) May 9, 2023 காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் … Read more

வரும் மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தை முன்னிட்டு மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி (மே 15ம் … Read more

மதுரை சித்திரைத் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் – சிசிடிவியை வைத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

மதுரை சித்திரைத் திருவிழாவில் நடந்த கொலை சம்பவம் – சிசிடிவியை வைத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.! பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட மூன்றும் சிகர நிகழ்ச்சிகள் ஆகும். இதில் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த மே 5ஆம் தேதி அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள் கூட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வழிப்பறி செய்து வந்த … Read more

பழனியில் பரபரப்பு.. பி.எஃப்.ஐ மதுரை மண்டல தலைவர் கைது.. என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி..!!

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் என்பவர் பழனியில் டீக்கடை நடத்தி வரும் நிலையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் … Read more

#JUSTIN || தமிழகத்தில் களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் – 10 இடங்களில் சோதனை.!!

தமிழகத்தில் களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் – 10 இடங்களில் சோதனை.!! சமீபகாலமாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் தமிழகத்தில் பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை ,தேனி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் … Read more

12ம் பொதுத்தேர்வில் தோல்வி.. 4 மாணவ மாணவிகள் தற்கொலை.!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் தோல்வியடைந்த 4 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை ஆவடி கோவர்த்தனகிரி பாரதிநகரை சேர்ந்த கனகராஜ் மகன் தேவா (வயது 17). இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இதில் நேற்று தேர்வு முடிவு … Read more

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.!

கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக ஆளும் கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இதனையடுத்து 224 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மே 10ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகா … Read more

தூத்துக்குடியில் பரபரப்பு… 3 சகோதரர்களை வாளால் வெட்டிய மர்ம கும்பல்… போலீசார் விசாரணை…!

தூத்துக்குடியில் மர்ம கும்பல் மூன்று சகோதரர்களை வாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கதிர்வேல் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் உசேன் (32), முகமது ஹசன் (30), முகமது ஆரோன் (27). இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, மது போதையில் சாலையில் இருந்த மர்ம கும்பல் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் … Read more

இரும்பு கதவை பதம் பார்த்த தேர்வர்கள்.. TNPSC தேர்வு மையத்தில் களேபரம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் தேர்வு முடிந்த பிறகு மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத வேண்டியவர்கள் 1.30 மணிக்கு உள்ளே வர வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி அரை மணி நேரத்துக்கு முன்பாகவே மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. அதன் பிறகு கால தாமதமாக வந்த 50க்கும் மேற்பட்டோரை தேர்வு எழுத … Read more