பல் பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு..!! காவல் ஆய்வாளர்கள் 3 பேர் சிக்கினர்..!!

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.  மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் வைக்கப்பட்ட விசாரணை குழுவானது கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை நடத்தியது. விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் … Read more

மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்.!

தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்.! திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ” தமிழகத்தில் எட்டு லட்சம் பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். அதற்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.  இந்தத் தேர்வு முடிவுகள் குறித்து மாணவ, மாணவிகள் கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க, “நான் முதல்வன் திட்டம்” … Read more

ராணிப்பேட்டை : அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து.. 2 பேர் படுகாயம்.!

ராணிப்பேட்டையில் அனுமதி இன்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆசிரியர் காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சுரேஷ், ராஜேந்திரன் ஆகிய இருவர் பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களில் தீப்பற்றி திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த … Read more

அளவுக்கு அதிகமாக புரோட்டின் பவுடர் சாப்பிட்டதால் இளைஞர் மர்மமான முறையில் மரணம்.!

கோவை மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரதோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகரன் (வயது 30) தந்தையுடன் சேர்ந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதனிடையே ஓய்வு நேரத்தில் தினகரன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இதில் உடலை கட்டு கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆசையில் அசைவ உணவு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் புரோட்டின் பவுடர்களை அதிகமாக வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த … Read more

மணல் தட்டுப்பாடு இருக்குங்க! அதான் 25 மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்தோம் – அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த 25 மணல் குவாரிகளில் மொத்தம்  7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதில், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குவாரிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு மணல் குவாரிகள் திறக்கப்படுவதும், அதில் எல்லையில்லாத அளவுக்கு மணல் அள்ளப்படுவதும் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் சரி செய்யவே முடியாத அளவுக்கு … Read more

காரைக்கால் : மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.!!

காரைக்கால் : மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.!! காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுகுணா குப்தா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை இன்று மாலை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.  இதையடுத்து அந்த சிறுமி வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டின் மீது விழுந்ததில் அவருடைய முதுகில் கேட்டின் கம்பிகள் குத்தியுள்ளது. இதனால், அந்த … Read more

நிறுக்காமல் சென்ற டிரைவர்.. வசை பாடிய கண்டக்டர்.. அரசு பேருந்தை நிறுத்தி வெளுத்து வாங்கிய பெண்..!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை பெண் ஒருவர் தனியாக வழிமறித்து நிறுத்தி ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் மகளிர் இலவச அரசுப் பேருந்து மண்மலை பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். … Read more

அதிமுகவில் முதல்முறையாக.., அடேங்கப்பா! எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் மூவ்!

இதுவரை இல்லாத வகையில் அதிமுகவில் முதல்முறையாக பூத் கமிட்டிக்கு தலைவர் மற்றும் செயலாளர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியில் சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் தொண்டர்களுக்கு இந்த பதிவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1000 வாக்காளர்களுக்கு, 20 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதில் இளம்பெண், இளைஞர் பாசறை மற்றும் மகளிர் அணி சேர்ந்த தலா பேரும், தகவல் தொழில்நுட்ப … Read more

பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற முதல் அணி! மரண மாஸ் வெற்றி! 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா நான்கு பக்கமும் சுழற்றி, சுழற்றி அடித்தார். மறுபக்கம் ஷுப்மன் கில்லும் லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதில், விருத்திமான் சாக 43 பந்துகளில், நான்கு சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட … Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு.!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்களில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது குறித்து கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அப்போது இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ரேஷன் கார்டு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் … Read more