இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி.. தலை நசுங்கி பெண் பரிதாப பலி..!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலைநசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் , சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவர் தனது மனைவி இசக்கியம்மாள் மற்றும் மகள் சோபிகாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்றார். அப்போது தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த கனரக லாரி ஒன்று அவர்களது இரு சக்கர வாகன்ம் மீது மோதியது. இந்த விபத்தில் இசக்கியம்மாளின் தலை மீது லாரியின் … Read more

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலகில் அழிந்து வரும் உயிரனங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசியின் அந்த அரசாணை உத்தரவுப்படி, மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் திட்டத்திற்காக 5 கோடியை நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக … Read more

#சற்றுமுன் || முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை,  அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.   இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

புரோ கபடி லீக்! இன்று மாலை அரை இறுதி ஆட்டங்கள்.!

புரோ கபடி லீக் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெற உள்ளன. எட்டாவது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாட்னா மற்றும் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அடுத்த 4 இடங்களைப் பிடித்த உத்திர பிரதேசம், குஜராத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய அணிகள் பிளே … Read more

சுயநிதி கல்லூரிகளில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்.!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்களில் சுய நிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வும், நேரடியாக நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் மொத்தமுள்ள 7,257 இடங்களில், 7,254 இடங்கள் நிரப்பட்டு … Read more

வெற்றி பெற்ற தேதிமுக வேட்பாளர்.. அடுத்த 3 மணி நேரத்தில் திமுகவில் இணைந்தார்.!

திருமங்கலம் நகராட்சியில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி … Read more

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. இளைஞர் கொலை.. மதுரை அருகே பரபரப்பு..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் இளங்காடு அடுத்துள்ள பகுதியில் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இறந்து கிடந்தது சிக்கந்தர் சாவடி மந்தி … Read more

#BREAKING || தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்ற பிரபல இஸ்லாமிய கட்சி.! நகராட்சி தேர்தல் முடிவுகள் : இரவு 9.30 மணி நிலவரம்.! 

அசாவுதின் ஓவைஸி கட்சி தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 3843 இடங்களில் 18 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது,  மீதம் உள்ள 3824 இடங்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,  திமுக 2360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 638 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.பகுஜன் சமாஜ் மூன்று இடங்களிலும், பிஜேபி ஐம்பத்தி ஆறு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் … Read more

#BREAKING || பேரூராட்சி தேர்தல் முடிவுகள் : இரவு 10.00 மணி நிலவரம்.! 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பேரூராட்சி தேர்தலைப் பொருத்தவரை மொத்தமுள்ள 7621 இடங்களில், 196 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  ஒரு வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நான்கு வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7407 இடங்களில்,  திராவிட முன்னேற்றக் கழகம் 4388 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 1206 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.பாஜக 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் 368 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் … Read more

மறு வாக்குப்பதிவு! நீதிமன்றத்தை நாட பாஜக முடிவு.!

புகாருக்குள்ளான வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் கட்சியான திமுகவே அதிக இடங்களில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தனித்து போட்டியிட்ட அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சில இடங்களில் வெற்றி பெற்றன. சுயேச்சை வேட்பாளர்களும் ஒருசில இடங்களில் வெற்றி பெற்றனர்.  இன்று வெளியான தேர்தல் முடிவுகள் … Read more