கமலை பின்னுக்குத் தள்ளிய விஜய்! நூறு விழுக்காடு தோல்வியடைந்த மய்யம்.!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் 100 விழுக்காடு தோல்வியை சந்தித்து உள்ளது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரங்களின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை உருவாக்கப்போவதாக கூறி வந்தார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சிக்கு நன்கொடை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கட்சியால் ஒரு இடத்தில் … Read more

மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக உறுப்பினர்.!

மதுரை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்கு எண்ணிக்கையில், 86வது வார்டின் முடிவுகள் வெளியானது. இதில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பூமா என்பவர் 190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை மாநகராட்சியில் பாஜக வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். பூமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு பாரதிய … Read more

ஓட்டுக்கு பணம் இல்லை., மது இல்லை., பொய் வாக்குறுதிகள் தரவில்லை., பாமக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி சத்திரியன்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தனித்து களமிறங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து பாமக வேட்பாளர்கள் களம் இறங்கி போட்டியிட்டனர். மாநகராட்சி வார்டுகள் : 5 இடங்களிலும், நகராட்சி வார்டுகள் : 48 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகள் : 73 இடங்களிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் குமார் என்பவர், … Read more

சூது கவ்வும் – ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.!

மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும் என்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரின் அந்த அறிக்கையில், “இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் … Read more

கோட்சேவின் பேத்தி நான்தான் எனக் கூறிய பாஜக வேட்பாளர் வெற்றி.!

கோட்சேவின் பேத்தி நான்தான் என்று கூறி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு … Read more

#சற்றுமுன் || சென்னை மாநகராட்சி முடிவு அறிவிப்பு.! 14 மாநகராட்சியை கைப்பற்றிய திமுக.!

சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 101 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் திமுக சென்னை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. தற்போதுவரை சென்னை மாநகராட்சியில் அதிமுக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  மேலும், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 32ல் திமுக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதிமுக 4 வார்டுகளில் வெற்றி … Read more

60 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கோட்டையை கைப்பற்றிய திமுக.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. பாமக வெற்றி நிலவரம்.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வேட்பாளர் வெற்றி … Read more

#BREAKING || மொத்த அரசியல் கட்சிகளையும் வாஷ்-அவுட் செய்த சுயேட்சைகள்.! முழுவதையும் கைப்பற்றி அசத்தல்.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி, மொத்தமாக 21 மாநகராட்சிகளில், திமுக 19 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல், 138 நகராட்சிகளில் 74 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது, அதிமுக நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக 29 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022… முன்னிலை நிலவரம்.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் … Read more