உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சியினர்.. இன்று வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஒரு … Read more

#BigBreaking || அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன் கைது.! 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சற்று முன்பு தமிழக காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் … Read more

ஜெயக்குமார் கைது! அதிமுக தலைமை கண்டனம்.!

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைக் கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வின் அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், ஜனநாயகப் படுகொலையையும் தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை திடீரென்று காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர். ஜெயக்குமார், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற மனப்பான்மையோடு, கள்ள ஓட்டு … Read more

பட்ஜெட் தாக்கல், தமிழக அரசு ஆலோசனை.!

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக நிதித் துறை மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் தயார் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.  தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், … Read more

முறைகேடுகளில் இருந்து திசை திருப்பவே ஹிஜாப் பிரச்சனை! அண்ணாமலை குற்றச்சாட்டு.!

ஆளும் கட்சி சார்பில் நடத்தப்பட்ட முறைகேடுகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே மதுரை மேலூர் வாக்குச்சவடியில் ஹிஜாப் பிரச்சனை எழுப்பபட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் மத்தியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது என்றார். இந்த தேர்தலில் பண பலமும், குண்டர்கள் மூலம் அட்டூழியம், … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு இபிஎஸ்., எஸ்பி வேலுமணி கடும் கண்டனம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, கள்ள ஓட்டுபோட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயக்குமார் கைதுக்கு, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கண்டன செய்தியில், … Read more

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடல்.! தமிழகம் முழுவதும் 1,700 கடைகள் மூடல்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 17ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 268 வாக்கியங்களில் இந்த வாக்கு … Read more

2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கல்லூரிகள்.. உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்ற மாணவர்கள்..!

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பின்பு மீண்டும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்க பட்டன. கொல்லம் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது. இதற்கிடையே பொருளாதார வசதி குறைந்த நிலையில் கல்லூரிகள் ஆனால் கொரோனா மூன்றாம் அலை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியது. கிறிஸ்மஸ் புத்தாண்டு காக டிசம்பர் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து கொரோனா  பரவல் குறைந்து நிலையில் … Read more

#வேலூர் || கொலை வழக்கில் கைதான ஆயுள்தண்டனை கைதி 'நந்தா' தப்பி ஓட்டம்.!

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி காணவில்லை என்று, காவலர்கள் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக தண்டனை பெற்று வருகிறார். ஆயுள் தண்டனை கைதிகளை சிறை வளாகம் மற்றும் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய கட்டடங்களை … Read more

தமிழகத்தில் இன்று மழை கொட்டி தீர்க்கபோகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

கேரளக் கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த … Read more