நடுவழியில் திடீரென கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கள்ளகிணறு அருகே  நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி 47 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஹேண்ட் பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் வேறொரு பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாராபுரம்-கோவை … Read more

தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது., திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது – எடப்பாடி கே. பழனிசாமி.!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.  இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது. நேற்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு … Read more

#சென்னை || தமிழக தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.! 

நகர்ப்புற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி, மாநிலத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி அளவில் நிறைவுபெற்றது. இதில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை … Read more

தமிழக அரசு துறையில் தனியார் மயம் – முதல்வர் ஸ்டாலின்.! பறிபோகும் அரசுப்பணி., வெளியான அதிர்ச்சி அறிக்கை.!

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்களைக் குறைத்து, தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் நம்பத்தகுந்த செய்திகள் பெரும் கவலையும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கின்றன. நில அளவை பணியாளர்களின் நலன்கள் எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் … Read more

மதுரை : ஹிஜாப் சர்ச்சையில் சிக்கிய பாஜக முகவருக்கு 14 நாட்கள் நீதிமன்றகாவல்..!

ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது என கூறிய பாஜக முகவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சிகள் சுயேச்சைகள் என பல முறை போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டில் வாக்குப் பதிவு செய்வதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த அதில் இருந்த பாஜக முகவரி நந்தன் என்பவர் அந்தப் … Read more

பெங்களூரு ஓபன் டென்னிஸ்! அர்ஜுன்-எர்லர் ஜோடி சாம்பியன்.!

பெங்களூரு ஏ.டி.பி. சேலஞ்சர் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் காடே ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர எர்லர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்களுக்கான இரண்டாவது ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியும் இந்தியாவின் அர்ஜுன் காடே, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர் ஜோடியும் மோதின. விறுவிறுப்பாக நடை பெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை அர்ஜுன் காடே, அலெக்சாண்டர் எர்லர் ஜோடி 6-3 என்ற … Read more

சென்னையில் ஐபிஎல் ஆட்டங்கள் உண்டா? வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.!

15வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.  10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஐபிஎல் ஆட்டங்களை ஒரே இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் … Read more

‘சர்கார்’ விஜய் பாணியில் இன்று சிறப்பான சம்பவம் செய்த நாகராஜன்.!

தமிழகத்தின் மயத்தம் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 439 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், இளம் தலைமுறையினர், மூத்த குடிமக்கள் என பலரும் உற்சாகமாக தங்களது ஜனநாயக கடமையை இன்று செலுத்தினர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டை சேர்ந்த நாகராஜன் என்பவர், இன்று காலை … Read more

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளி.. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!

மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா கூலி தொழிலாளியான இவருக்கு காரணமாக வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுத்த வந்துள்ளார். மேலும் , அவரது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலைத் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத … Read more

கால்நடை மருத்துவ படிப்பு! 24 ஆம் தேதி கலந்தாய்வு.!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 24-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும் என்றும், 25-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அதனை தொடர்ந்து பொதுப் பிதிவினருக்கான … Read more