வாக்குப்பதிவு நிறைவு! பாதுகாப்பை பலப்படுத்த சைலேந்திர பாபு உத்தரவு.!

பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்த போது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் || நிறைவடைந்தது வாக்குபதிவு.. ஜனநாயக கடமையை நிறைவேற்றாத பிரபலங்கள்..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய திரைபிரபலங்கள் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இன்று காலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வந்து தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர். அரசியல் கட்சியினர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில், கமலஹாசன், விஜய், ஜெயம் ரவி, விமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்த நிலையில், ரஜினி, … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி! தமிழக அணி ரன்குவிப்பு.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் தமிழக அணி அபார ஆட்டத்தை வெளிபடுத்தி 494 ரன்கள் குவித்துள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழக அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் … Read more

கூடங்குளம் அணுக்கழிவு மையம் : மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்.!

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க “இந்திய அணுமின் கழகம்” ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் சேமித்து வைக்கும் அணுக்கழிவு மையங்களை கூடங்குளத்தில் அமைக்க இந்திய … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களுக்கு திமுக எம். பி கனிமொழி அட்வைஸ்..!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அரசியல் கட்சிகல் சுயட்சை வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றன. தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரச்சாரத்தின் போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. மக்கள் எழுச்சியாக, மகிழ்ச்சியாக  உள்ளனர்.  திமுக ஆட்சியின் மீது … Read more

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் மழை.!!

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை முதல் 22.2.2022 வரை : தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை … Read more

விஜயகாந்துக்கு என்ன ஆனது? இந்த முறையும் ஏன்? சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக வாக்களித்த வரவில்லை என்று, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை மாநகராட்சி தேர்தலில், சென்னை சாலிகிராமம் காவிரி உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பிரேமலதா விஜயகாந்த் உடன் அவரின் இரண்டு மகன்களும் வாக்களிக்க வந்தனர்.  கடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவில்லை. இந்த முறையும் விஜயகாந்த் … Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் பிரபலங்கள் எங்கு வாக்களிக்க உள்ளனர் தெரியுமா.?

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ் ஐ இ … Read more

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு.!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  மாநகராட்சிகளில் உள்ள 1374 வார்டுகளுக்கும், நகராட்சியில் உள்ள 3843 வார்டுகளுக்கும், பேரூராட்சியில் உள்ள 7621 வார்டுகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்கு சாவடிகள் … Read more