#சற்றுமுன் || பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மாவட்ட துணைத் தலைவர்.! 

பா.ம.க.,வின் வேலூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் என்பவர் அக்கட்சியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,  “வேலூர் மாநகரத்தைச் சேர்ந்த வேலூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,  இன்று  (12.02.2022) சனிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் … Read more

ஊடகங்களில் விளம்பரம்! முன் அனுமதி பெற தேர்தல் ஆணையம் உத்தரவு.!

தேர்தலுக்காக ஊடகங்களில் பிரசார விளம்பரம் செய்பவர்கள் முறையாக முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மாநில அளவில், நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பித்து முன்னனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள … Read more

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் லஞ்ச நதி பெருக்கெடுத்து ஒடுகிறது – வெளியான பரபரப்பு அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் கரியமலை கிராமத்தில் சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் 4000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதிக்கு ஊராட்சி செயலர் 20000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். திருவள்ளூர் மப்பேடு பகுதியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் … Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2 வரை நீட்டிப்பு –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன், தமிழக முதல்வர் ஆலோசனை கொண்டார். இந்த ஆலோசனையின் போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து, தமிழக முதல்வர் ஆலோசனை செய்தார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டித்து … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வட கடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை தென் தமிழக … Read more

#Breaking : அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடாபகுதியில் ஏற்பட்ட வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக   கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் … Read more

மொபைல் ஆப் மூலம் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. சென்னை காவல்துறை கடுமையான எச்சரிக்கை.!

மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீபகாலமாக மொபைல் ஆப் மூலம் வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு இது போல ஒரு மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது. இது போன்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நிலையில் ப்ளே ஸ்டோர் மற்றும் சமூக வலைதளங்களில் அதுபோல கடன் கொடுக்கும் செயல்கள் அதிகரித்து … Read more

பாஜக வினோஜ் முன்ஜாமீன் கோரி மனு.. பாஜக மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டு.!!

பாஜகவினர் மீது தமிழக காவல்துறை குற்றசாட்டியுள்ளது. இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக போலீஸ் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக வினோஜ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பயன்படுத்து வருகிறார் என காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். மேலும், மனுதாரர் தமிழக பாஜக இளைஞரணி தலைவராகவும், சமூக வலைதளத்தில் அதிகம் பின் தொடர்பவர்கள் நிலையிலும் உள்ளார்.  அரசு பொது அமைதியை குலைக்கும் … Read more

ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன.? தயாநிதி மாறன் கேள்வி.!!

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? பாராளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களும் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி … Read more

#BigBreaking || ஆல்-அவுட்., அசத்திய இந்திய அணி.! வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ்.!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 13 ரன்னுக்கும், ஷிக்கர் தவான் 10 ரன்னுக்கும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் உடன் கைகோர்த்த ரிஷப் … Read more