#INDvsWI || முதல் ஓவர்லயே., டெபியூ விக்கெட் எடுத்து அசத்திய தீபக் ஹூடா.!  171 க்கு 8., ஆட்டத்தின் தற்போதைய நிலை.! 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, நிதானமாக  ஆடிய … Read more

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத மற்றும் விதிமீறல் தொடர்பாக 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்.. ராஜபாளையத்தில் நிகழ்ந்த சோகம்..!

தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலி தொழிலாளி ரயில் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவருக்கு திருமணமாகி மரகத வள்ளி என்ற மனைவி இருக்கிறார். கட்டிட தொழிலாளியான கந்தவேல் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் பின்புறம் … Read more

கோவில்கள் மட்டும் திட்டமிட்டு இடிப்பு, ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு.!

பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோவில்களை மட்டுமே தமிழக அரசு இடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தாக்கல் செய்துள்ள மனுவில், 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகள் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள 200 … Read more

#BREAKING || தமிழகம் : பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு.!

மதுரை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மதுரை அருகே பாஜக பெண் … Read more

அந்தமான் நகராட்சித் தேர்தல்.. அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் வருகின்ற 6.3.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் – நிக்கோபார் மாநிலத்தில் வருகிற 6-3-2022 அன்று நடைபெற உள்ள அந்தமான் போர்ட்பிளேயர் நகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.               … Read more

தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் நாளை முதல்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் : தென் தமிழக மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  12.2.2022 … Read more

இன்றைய (09.2.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

முதலமைச்சர் கணிணி தமிழ் விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!

முதலமைச்சர் கணிணி தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணிணி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “முதலமைச்சர் கணிணி தமிழ் விருது” என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.  2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதிற்கு தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் மென்பொருள்கள் உருவாக்கிய தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அந்த … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்-அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை … Read more