தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்.. நேரலையில் ஒளிபரப்பு.. நிறைவேற்றப்பட போகும் மசோதா.!!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி நிலையில், இது குறித்து விவாதிக்க கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு … Read more

#BREAKING || பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.    Source link

ஒரு பேரூராட்சியை இழந்த திமுக.! தேர்தலுக்கு முன்பே 11 வேட்பாளர்கள் வெற்றி.! பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்வு.?!

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், சிலர் கடந்த இரு தினங்களாக தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தனர். இன்று வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான நேரம் … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி அத்துமீறிய மருத்துவர்.. சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆபாச வீடியோ காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில்  பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது டாக்டர் மோகன்குமார் என்பவர் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போகிறது "இரட்டை இலை” தான் – தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அவர்களின் அந்த கடிதத்தில், “நிழலின் அருமை வெயிலில் தெரிவது போலவும், நேர்மையின் பெருமை நிம்மதியில் அறியப்படுவது போலவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அருமையும், பெருமையும் விடியா பொழுதாக, முடியா இருளாக விளங்கும் திமுக … Read more

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும் – மத்திய அரசு.!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக -வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்றும், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில், … Read more

#BREAKING : தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு.. இன்றைய நிலவரம்.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

75,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சம்பழம்.. எங்கு தெரியுமா.?

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால் குடம், தீர்த்த குடம், ஆறுமுகக்காவடி மற்றும் அக்னி கும்பம் எடுத்து பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் … Read more

நோயாளியிடம் நகையை திருடிய போலி டாக்டர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபு என்ற மருத்துவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார் அப்போது உங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் நீங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றி வேண்டுமென அந்த பெண்ணிடம் டாக்டர் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் ஆபரணங்களை கழற்ற மறுப்பு தெரிவித்ததால், … Read more

அடுத்த 11 நாட்கள் போர்க்களம்.. தமிழகத்தில் 'தாமரை மலர்ந்தே தீரும்'-பாஜக அண்ணாமலை.!

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் “அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் இருக்கும். … Read more