பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சி வழங்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.!

கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சிகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் … Read more

இதை செய்தால் வெற்றி அதிமுகவிற்கு தான்.. பூங்குன்றன் கொடுத்த ஐடியா.!!

அதிமுகவில் முன்னாள் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது பொறுப்பில் இல்லாத தகுதி வாய்ந்தவர்களை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், சென்னை தவிர மற்ற மாநகராட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பார்த்தேன். பணிக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற பணிக்குழு அவசியம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. மாவட்ட கழகச் செயலாளர்கள் பெயர்கள் தான் … Read more

95-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.!!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து..!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கழித்து தமிழக அரசிற்கு ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 9:55 மணிக்கு டெல்லிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது … Read more

மருத்துவமனைக்கு சென்ற சிறுமி.. தாய் தந்தையர் கைது..! அரியலூரில் பகீர் சம்பவம்.!

அரியலூர் மாவட்டத்தில் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் சிறுமி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். எனவே மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது மருத்துவருக்கு 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரணை … Read more

கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் தகாத உறவு.! பள்ளியறையில் பகீர் சம்பவம்.!

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மலர் என்ற 45 வயது பெண்மணி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.  அவருடன் கரிகாலன் என்ற நபரும் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் வேலை முடிந்து பள்ளி அறை ஒன்றில் உறங்க சென்றுள்ளனர். காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் அறையை விட்டு அவர்கள் வெளியில் வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த … Read more

மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்தி குத்து.! அமைதியாய் நின்றவரை அறுத்துப்போட்டு சென்ற தெருவாசி.!

காரைக்கால் அருகே மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி : காரைக்கால் கட்டளை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். 36 வயதாகும் இவர் காரைக்கால் தருமபுரம் தெருவில் வசித்து வரும் இவரது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். தனது மகள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாங்குவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற காளீஸ்வரன், மாமியார் வீடு பூட்டி இருந்ததால், தெரு ஓரமாக அமைதியாக காத்திருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (40 … Read more

#தமிழகம் || இன்ஸ்டா நாடக காதலனுடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி.!

பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் வாங்கிக்கொடுத்த செல்போனில், இன்ஸ்டாகிராமில் பொழுதைப் போக்கிய பள்ளி மாணவி ஒருவர், காதல் வலையில் சிக்கி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே தடாகம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவ,ர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால், மாணவியின் பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் மாணவி கல்வி … Read more

சென்னை || நாடக காதலனால் பள்ளி மாணவி தற்கொலை.! சிக்கிய பரபரப்பு கடிதம்.! 

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, நாடக காதலன் ஏமாற்றியதால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மாணவி தற்கொலை சம்பவத்தை அறிந்த மதுரவாயல் … Read more

பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? – கொந்தளிப்பில் மருத்துவர் இராமதாஸ்.!

வேலூர் மாநகராட்சி பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, “வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை  திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது! வேலூர் … Read more