தி.மலை., அக்னிகலசம் : பின்னணியில் திமுக அமைச்சர்? 1 லட்சம் அக்னி கலசம் நிறுவினால் என்ன செய்வீர்கள்? இயக்குனர் கவுதமன் ஆவேசம்.! 

கடந்த 1989ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில், வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் நிறுவப்பட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர், திருவண்ணாமலை மாவட்ட … Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடி உயிரிழப்பு.!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஹிமாலயா என்ற பெயரிடப்பட்ட கரடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இமயமலைப் பகுதிகளில் காணப்படக்கூடிய ஆசிய கருப்பு கரடி இனமான ஹிமாலயா கரடியும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது இதில் ஜான் என்ற பெயர் கொண்ட 34 வயது உடைய இமயமலை கருப்பு கரடி ஒரு மாதத்திற்கு மேலாக சரியான … Read more

ட்விஸ்டனா இதான் ட்விஸ்ட்.! ஒரே இரவில் ஆட்டத்தை மாற்றிக்காட்டிய ஓபிஎஸ்.! அதிர்ச்சியில் திமுகவினர்.!

தேனி : அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாவட்ட மகளிரணி நிர்வாகி ஒருவர், மீண்டும் அதிமுகவில் இந்த சம்பவம், அம்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகியும், போடி நகர இணைச் செயலாளராகவும் இருந்து வந்தவர் முனியம்மாள். இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போடி 24 வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக பொறுப்பு வகித்து உள்ளார். இந்த முறை அவருக்கு அதிமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து அதிமுகவில் … Read more

சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து.! குடும்பத்துடன் சிக்கிய பிரபல நடிகர்.!

சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சென்னை தி.நகர் பாண்டி பஜார் சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் துணிக்கடை மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகம் ஆகியவை தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.!

சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த … Read more

சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு.!

சென்னையில் புத்தகக் கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி … Read more

மாமனாருக்கு ஒன்னு, மருமகளுக்கு ஒன்னு., காட்டுமன்னர்கோவில் பேரூராட்சியில் திமுக செய்த சம்பவம்.!

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் பக்கத்து பக்கத்து வார்டுகளில், திமுகவை சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் போட்டியிடும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்களில் ஏற்கனவே போட்டியிட்ட திமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் தலைவர் பதவிக்கு களமிறங்கியுள்ளார். இதேபோல் 5 வது வார்டில் தமிழ்ச்செல்வன் என்பவரும், 10-வது வாரத்தில் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 37 பேர் பலி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

சுமார் 100 கோடி ரூபாய் மோசடி., முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!

தமிழ்நாடு கிராம வங்கியின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகள் சிலவற்றில் கடன் பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் செலுத்திய கடன் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் CRD என்ற தொண்டு நிறுவனம் மோசடி செய்துள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.  இதுபற்றி முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறிழைத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நியாயமாக கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ட்ரைவர்..போக்ஸோவில் கைது.!

பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுதாகரன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை … Read more