கம்பஹா மாவட்ட செயலகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நிகழ்ச்சி

கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தலைமையில் சமீபத்தில் மாவட்ட செயலகத்தில் ஏற்றுமதி நோக்கில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கம்பஹா மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய பொருளாதாரத்திற்கு உற்பத்தித் திறன் மிக்க தொழில் முனைவோரை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏற்றுமதி சந்தைக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் மீன் வளர்ப்பிற்கு … Read more

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை

இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன்; தலைமையில் நேற்றைய தினம் காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 03.00 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையினை அரசாங்க அதிபர் அவர்களுடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. நில்மினி ஹேரத் அவர்களும், பணிப்பாளர் திருமதி இரேஷ தர்மசேனா அவர்களும் மற்றும் ருNகுPயு … Read more

மஹாவிளச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான பொருட்கள் விநியோகம் அண்மையில் (06) மகாவிளச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இலக்கம் 367 தெமடமல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எஸ். திருமதி சுமங்கலா என்பவர் தெரிவு செய்யப்பட்டு அவரது சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சில உபகரணங்கள் வழங்கப்பட்டதாக பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்வில், மகாவிளச்சி பிரதேச செயலாளர் மஞ்சரி … Read more

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது! – அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன வகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது யுத்த காலப் … Read more

சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் – அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டின் தற்போதைய … Read more

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் – மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் வேண்டுகோள்

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவனொலிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அல்லது சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் (அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில்) உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் … Read more

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கும் உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் இடையில் ஆர்டர்களை வழங்குவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும், அவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் … Read more

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து அரரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்கள், விசும்பாய மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாக திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க குழு நியமனம் ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் … Read more

ஜனாதிபதி தலைமையில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பில் கலந்துரையாடல் 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அதன் ஒரு அங்கமாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவு தலைப்புக்கு அமைவான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன … Read more

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையை முழுமையாக வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் Key Zheng Hong இன்று (10) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் … Read more