வன்னி பாதுகாப்பு படையினரால் வவுனியாவில் கறுவாச் செய்கை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அறிவுறுத்தலின் கீழ், 56 வது காலாட் படைப்பிரிவின் படையினரால், 04 ஆகஸ்ட் 2024 அன்று பரசங்குளத்தில் கறுவா செய்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வவுனியா வடக்கில் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 34 கிராம மக்களுக்கு 6392 கறுவா கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட … Read more

“காஸா சிறுவர் நிதியத்திற்கு” கிடைத்த மேலும் 05 இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட “காஸா சிறுவர் நிதியத்திற்கு” மேலும் ஐந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் (590,000/-) அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. இந்தத் தொகையை பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். … Read more

சம்மாந்துறையில் கிராமிய மக்களின் ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதற்காக இடைப் போகத்தில் பாசிப்பயறு உற்பத்தி…

கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் இடைப்போகத்தில் பாசிப்பயறை நட்டு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா தலைமையில் (06) கல்லறச்சல் 02 பிரதேசத்தில் இடம்பெற்றது. இம்முறை சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஏக்கரில் பாசிப் பயறு விதைகளை நடுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் அணியினர்…

இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணியினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 18 வீரர்களைக் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டிய ஜெப்ரி வெண்டர்ஸே மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இந்த அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் … Read more

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் – ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். … Read more

27 வருடங்களின் பின்னர் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி ஒரநாள் தொடரை கைப்பற்றியது…

நேற்று (07) இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியது. அதன்படி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக … Read more

சிந்துஜாவின் இறப்பு தொடர்பில் நியாயமான தீர்வு வழங்க வேண்டும்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மதியராயன் சிந்துஜா அவருடைய இறப்பு தொடர்பான விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்கின்ற விசாரணையாக இருக்காமல் ஒருநீதியான விசாரணையூடாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (07.08.2024) நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் தேசத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கும் போது குறிப்பிட்டார். அதை விட 9 வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வரவுள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பையும் நாங்கள் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்த தவறும் பட்டத்தில் … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்டவாங்குவது தொடர்பான அறிக்கை

சுற்றறிக்கையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டிற்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 2024.07.26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கல்வி அமைச்சின் ஊடாக மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்குவதையோ அல்லது அதிகாரிகளை இடமாற்றுவதையோ இடைநிறுத்தியுள்ளதுடன், கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் மேற்படி தகவல் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு..

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.07 ஆம் தகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.