இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு – 3 ஆவது தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை … Read more

மத்திய மாகாணத்தில் 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

மத்திய மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்த மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் இதுவரை 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இதுவரை 38 இலட்சத்து 85 ஆயிரத்து 685 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற 'சார சங்ஹிதா' புலமை இலக்கிய நூல் வெளியீட்டு விழா

பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா இன்று 08 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடந்த வருடம் பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டன. சட்டவாக்க செயற்பாடுகள், … Read more

பாராளுமன்ற அமர்வு இன்று

பாராளுமன்றத்தை இன்று (08) முதல் 11ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதிச் சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரையான பாராளுமன்ற அமர்வு தினங்களில் மாற்றம் செய்யப்படவில்லையென்பதுடன், 09ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற அலுவல்கள் பின்வருமாறு … Read more

07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்  

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமானதொரு முற்போக்கான படியாகும்

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுப்பதுடன், குறித்த சட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான உறுதியான பாதுகாப்பை வழங்கும் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக அமையும். முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் … Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு: நோயாளிகள் அசௌகரியத்தில்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(07) காலை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளிகள் கடும் அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தாமதித்ததால் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நேர்ந்ததாக அந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை எந்தவிதத்திலும் நியாயமானதல்ல என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க தலைவர் சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளில் சிலவற்றுக்கு தீர்வு வழங்க ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதியர் சார்ந்த பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை… அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ தலைமையில் புதிய குழு

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதி அவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அவர்களது தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார். சுங்கத் திணைக்களத்தின் … Read more

இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 'தமிழ் இனப்படுகொலை' குற்றஞ்சாட்டு மறுப்பு

மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் … Read more