இந்தியாவில் 5 வீதமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக 1 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று (08) காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,524 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 5.02 … Read more

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் 249 மில்லியன் ரூபா செலவில் பன்சேனை கொங்கிறீட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினையும், காஞ்சிக்குடா தொடக்கம் பன்சேனை வரையிலான 6 கிலோமீற்றர் பிரதான வீதியினை … Read more

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கைகை மத்திய வங்கி தொடங்குகின்றது

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கைகை மத்திய வங்கி தொடங்குகின்றது.  

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க ஜப்பானிலிருந்து வாகனங்கள் , உபகரணங்கள் அன்பளிப்பு…

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) முற்பகல், ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi Hideaki) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, … Read more

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல. இவ்வாறான சம்வங்கள் இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வுவாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். உணர்ச்சி வசப்படும் மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காது இதுதொடர்பான விடயங்களை வெளியிடும் போது விசேடமாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்களின் வள்ளங்களை இலங்கையில் ஏலம் விட இருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் … Read more

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு – 3 ஆவது தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக விசேட பிரச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டிகளை … Read more

மத்திய மாகாணத்தில் 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

மத்திய மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்த மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் இதுவரை 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இதுவரை 38 இலட்சத்து 85 ஆயிரத்து 685 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.