மட்டக்களப்பு  தேசிய பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் உத்தரவு

மட்டக்களப்பு தேசிய பாடசாலையொன்றில் மாணவியொருவருக்கு சித்திரப் பாடம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட   அசௌகரியம்  தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கல்வி அமைச்சின் ஊடாக அறிவிப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜெயந்த இன்று (07)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மட்டக்களப்பு    மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   இந்நிகழ்வு தொடர்பான தகவல்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மூலமாக … Read more

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பூர்த்தி செய்யப்படும் 

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் … Read more

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட த்துறை மாணவர்கள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகர், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் 280 பேர் நேற்று (06) களப்பயணத்தில் … Read more

இந்தியாவின் புது தில்லியில் கொரியா குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான Lieutenant Colonel Han Jonghun (2024 06 ஆகஸ்ட்) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார். Lieutenant Colonel Han Jonghun, இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் கொரியா குடியரசு பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரியா குடியரசின் தூதரகத்தில் கடமையாற்றுகிறார். இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படை தளபதி … Read more

மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி தற்பொழுது (07.08.2024) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற … Read more

தேர்தல் பிணக்குகளைத் தீர்க்கும் மையங்களின் ஒருங்கிணைப்பு தகவல்கள்

தேர்தல் பிணக்குகளைத் தீர்க்கும் மையங்களின் ஒருங்கிணைப்பு தகவல்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை வெளியிட்டுள்ளது.  

பாடசாலை மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்த முடியும் – கல்வி அமைச்சர்

பாடசாலை மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல் தொடர்பாக சுற்று நிருபத்தின் மூலம் தெரியப்படுத்த முடியும் எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜெயந்த நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்காகப் பயன்படுத்தும் போது அவை சேதமடைவதாகவும் குறிப்பிட்டு மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த இதனைத் தெளிவுபடுத்தினார்.

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாணவர் விடுதியை பாதுகாப்பு செயலாளர் பார்வை

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி மாணவர் விடுதி கட்டிடத்தை பார்வையிடுவதற்காக நேற்று (ஆகஸ்ட் 06) ஸ்தல விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கை இராணுவத்தின் 6 ஆவது பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவினால் இந்த உட்கட்டமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் இத்துடன் பணியாளர்களுக்கான மூன்று மாடி விடுதி ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. முப்படையினரின் பங்களிப்பில் பாடசாலை அபிவிருத்தி பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருவதுடன் பாடசாலையின் விளையாட்டு மைதானம் இலங்கை கடற்படையால் … Read more

பரிஸ் ஒலிம்பிக் போட்டி – அருண தர்ஷனவிற்கு 5 ஆவது இடம்

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார். இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது. அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு உயர்ந்தபட்சம் 2,500 ரூபாய்கள் அதிகரிக்க தீர்மானம்

ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு முழுமையான சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்தபட்ச 2,500 ரூபாய்கள் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம்; 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும். அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு … Read more