மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 10% ஆக அதிகரிப்பு

60 வயதுக்கு மேற்பட் மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய்கள் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10% சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் 8.5% சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்படும் வட்டி வீதத்தை அரச வங்கிகளுக்கு மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு … Read more

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது

• நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடாக இருக்க வேண்டும். • பங்களாதேஷ் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என்பதில் சந்தேகமில்லை. • காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவத் தேவையான சட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை … Read more

ஜனாதிபதித் தேர்தல் – 2024 : 2024.08.06 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்கள்

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.06 ஆம் தகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது

அரசு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள்

அரச ஊழியர்களின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அரச துறைகளில் தகவல் தொழில்நுட்ப முறைமைகளை ஒருங்கிணைப்பது சிறந்தது என்பதை அங்கீகரித்து ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,; மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அனைத்து அரச நிறுவனங்களையும் … Read more

2024 ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள்

2024.07.31ஆம் திகதி முதல்; 2024.08.05ஆம் திகதி பி.ப 05.00 மணி வரை மொத்தமாக 99 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் … Read more

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் ஒரே விதமாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கை

நாடளாவிய ரீதியில் சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கான தேசியக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கும் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதியளித்துள்ளது, இது தொடர்பாக நேற்று (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 5. சிறுவர் பகல் பராமரிப்பு … Read more

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை தெரிவில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து

இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து கிடைத்த புதிய அங்கீகாரம் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார். ஏனைய இருவரும் இந்திய மகளிர் அணியை சேர்ந்தவர்களாவர். அதன்படி, … Read more

மெனிக்திவெல மத்திய கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை.. – விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புள்ள விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மெனிக்திவெல மத்திய கல்லூரியில் … Read more

ஜனாதிபதித் தேர்தல் – 2024 : 2018.08.05 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்கள்

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2018.08.05 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.