வடக்கு கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதால் மூழ்கிய இந்திய மீன்பிடி படகில் இருந்து 2024 ஜூலை 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்கள் மற்றும் சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஒரு (01) மீனவரின் உடல் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இந்திய கடற்படைக் கப்பலான ‘INS BITRA’ க்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு,..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 04ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் … Read more

யாழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி

• உதயன் பணி மனைக்கும் சென்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது உதயன் பத்திரிகை பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், … Read more

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – கடற்றொழில் அமைச்சர்

தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  நேற்று (02.08.2024) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் … Read more

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி

யாழ்.பேராயரையும் சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களை நேற்று (02) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, யாழ்.ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்.ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதனைடுத்து நேற்று பிற்பகல் யாழ். நாக விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். புனித தலத்தை சென்றடைந்த ஜனாதிபதி முதலில் புத்த ஸ்தூபிக்குச் … Read more

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.  பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் … Read more

தென்னை மற்றும் இளநீர் உற்பத்திகளில் பரவிவரும் வெள்ளைப்பூச்சு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தென்னை மற்றும் இளநீர் உற்பத்திகளில் பரவிவரும் வெள்ளைப்பூச்சு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள என்கார் சிஸ் கௌடா லோபஇ  (Encarcis Guadeloupae)      எனும் பெயரிலான மூன்று விசுறிகளை இவ்வருடத்தினுள் பகி;ர்ந்தளிப்பதற்கான பணிகளை தென்னை உற்பத்திச் சபை மேற்கொண்டுள்ளது. இந்த வருடத்தினுள் தென்னை உற்பத்தியை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக (01) நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. தென்னை உற்பத்திக்கு வெள்ளைப் பூச்சினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

– இந்தியா, ஜெர்மனியில் இருந்து பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்பு  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (2) ஆரம்பமானது. இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன்  ஊர்தி … Read more

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்

• புதிய பொருளாதார, அரசியல் முறைமையுடன் முன்னேறிச் செல்வதற்காக ஒன்றிணைவது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும். • இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை. • சிங்கள மொழியுடன் தமிழையும் ஊக்குவிக்க வேண்டும் – தமிழகத்தில் எற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்- யாழ்ப்பாணத்தில் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், … Read more

.பாராளுமன்றம் ஆகஸ்ட் 6 முதல் 9 வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் நேற்று (02) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் … Read more