எதிர்வரும் வரும் செப்டம்பர் முதல் அனைத்து அரசு ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவாக ரூ.3000

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவுக்கு 3000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும், … Read more

தாலையடி கடல்நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (02) திறந்துவைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு நீர் விநியோகம் : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்களின் நீர்ப் பாவனையானது வழமைக்கு மாறான அதிகமாக காணப்படுகின்றமையால் நீர் மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதாவது, கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது … Read more

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்

• இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் என்றும் மறந்துவிடல்லை – யாழ். மாவட்ட இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என … Read more

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய 'திதுலன தாரக்கா'

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான ‘திதுலன தாரக்கா’ என்ற நூல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு நூலாசிரியரால் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று (01) வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது. இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய முதலாவது ஆய்வு நூலாக இந்நூல் பல்கலைக்கழக … Read more

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தால் அனைத்து இலங்கையர்களையும் அழைத்து வர தயார்

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தால் அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 05 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்வரை, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய கிழக்கில் பணிபுரியும் … Read more

யாழ். மக்களின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வு வழங்க ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்

• சிவில் யுத்தம் முடிந்துவிட்டது : இப்போது அபிவிருத்திக்கான யுத்தத்தை ஒற்றுமையாக ஆரம்பிப்போம். • அடுத்த 05 – 10 வருடங்களில் வடக்கு அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றப்படும். வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 – 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி … Read more

புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக 'ஓட்டமாவடி சந்தை வீதி' தற்காலிகமாக மூடப்படும்…

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத பாதையில் பூனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ‘ஓட்டமாவடி சந்தை வீதி’ புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, 2024.08.03ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.30 வரை முழுமையாகவும், அதே தினம் மாலை 04.30 முதல் (மறுநாள்) 2024.08.04ஆம் திகதி இரவு 10.00 மணி வரை பகுதியளவிலும் இந்த பாதையை தற்காலிகமாக மூட … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 749 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கைது

கடற்படையினரால் (2024 ஜூலை 31) அதிகாலையில் கல்பிட்டி, உச்சமுனே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட எழுநூற்று நாற்பத்தொன்பது (749) கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பற்காக, கடற்படையினர் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை … Read more

'பெரிஸ் 2024' ஒலிம்பிக்கில் இலங்கையில் இருந்து தருஷி

கருணாரத்ன பங்கேற்கும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (02) நடைபெறவுள்ளன. பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. தருஷி 6 வது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன் இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில், தருஷியைத் தவிர மேலும் 3 … Read more