ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள  சிரேஷ்ட  அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்                                                                                   … Read more

விவசாயிகளுக்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு உத்தரவாதம்

விவசாயிகளுக்கு மிகவும் சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்குவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ண தெரிவித்தார். கடந்த சில நாட்களாக காணப்பட்ட அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக நேற்று (04)பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தற்போது 8 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் நெல் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் விவசாயிகளுக்கு எதிர்வரும் சில தினங்களில் பசளைக்காக நிதி … Read more

கேகாலை மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது

டிசம்பர் மூன்றாம் திகதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக சேவைத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்டம் நேற்று கேகாலை நகரசபை மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அனைவரையும் வரவேற்று மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாக) கே.ஜி.எஸ். நிஷாந்த் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு , சமூக சேவைத் திணைக்களத்தின் இயக்குநர் தர்ஷினி கருணாரத்ன மற்றும் மாவட்ட செயலாளர் ஃ மாவட்ட நீதிபதி ரஞ்சன் ஜயசிங்க ஆகியோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் … Read more

கிளிநொச்சியில் மாபெரும்  தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் 

கிளிநொச்சி மாவட்டத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு நாளை (06) கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் காலை 9.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் 30ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளன.  இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனை … Read more

பாராளுமன்றம் இன்று கூடுகிறது – இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்திற்கு

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது – கலால்வரித் திணைக்களம்

டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இன்று (05) முதல் இடைநிறுத்துவதற்கு கலால்வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கலால்வரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 5.7 பில்லியன் ரூபாய் தொகையை செலுத்தாத காரணத்தினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு சுகாதார சேவையில் சர்வதேச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சர் நடவடிக்கை

இலங்கையின் சுகாதார சேவையில் உலக சுகாதார அமைப்பு உட்பட பிற சர்வதேச அமைப்புகள் தற்போது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை சரியாக மதிப்பிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் அதிக உற்பத்தித்திறன் கொண்ட முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை … Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது

அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில்  சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது. நாட்டுக்கு உகந்த தூய்மையான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  … Read more

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதனை டிசம்பர் 31ஆம் திகதி அளவில் முடிவுறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கு அறிக்கைக்கான யோசனைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தை இன்று (05) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் இதனை வெளியிட்டார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை தாமதமடைவதனால் மாத்திரம் மேலதிக பற்றாக்குறை வட்டியாக 1.7 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்படும் என்றும் பிரதி … Read more

IM Japan தொழில்நுட்ப சேவை பயிற்சித் திட்டத்தின் (TITP) கீழ் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற குழு ஜப்பான் பயணம்

IM Japan தொழில்நுட்ப சேவை பயிற்சி திட்டத்தின் (TITP) கீழ்  47வது பயிற்றப்பட்டவர்கள் குழு  கடந்த (02) திங்கட்கிழமை ஜப்பானுக்கு புறப்பட்டது. இக்குழுவில் தாதியர் சேவையில் 5 பயிற்சி பெற்றவர்களும், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் தலா ஒவ்வொரு பெண்  பயிற்றப்பட்டவர்களும் உள்ளடங்குவர். தாதிச் சேவை, நிருமாணம், உற்பத்தி, பராமரிப்பு, மோட்டார் தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு போன்ற துறைகளுக்காக 504 தொழில்நுட்ப பயிற்சி  பெற்றவர்கள்  தற்போது வரை ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள்.  இவ்வேழு பேர்கள் கொண்ட குழுவே 2024ஆம் … Read more