பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையுடன் இணைந்து இலங்கை தபால் துறையை வலுவூட்டும் திட்டங்கள்

இலங்கையின் முதல் ஐந்து தபால் நிலையங்களில் ஒன்றான காலி கோட்டை தபால் நிலைய வளாகத்தை புதுப்பித்து, அதை பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில் (ICTA) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது. 

எல்பிடிய பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சி நிகழ்வு

எல்பிடிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிகளுக்கான தெளிவுபடுத்தல் பயிற்சி நிகழ்வொன்று காலி வக்வெல்ல தென்மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (10) தென்மாகாண ஆளுநர் எம். கே. பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம்பெற்றது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை

பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாத்தளை விவசாயிகளுக்கு 642 தொன் உரம்

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆழுP உரம் 365 தொன் தற்போது கிடைத்துள்ளதாக மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் பி.என்.சி.எச். குமாரிஹாமி தெரிவித்துள்ளார் என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

ஜனாதிபதி நாடு திரும்பினார்

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் … Read more