ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில்..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எம். எம். பத்மலால் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. 2024ஆம் ஆண்டில் … Read more

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வது குறித்து எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்பட மாட்டாது என்றும், இந்த வார இறுதியுடன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வரிசை முடிவடையும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் … Read more

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (22.10.2024) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.  யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய … Read more

டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக தனியான அமைச்சு…

டிஜிட்டல் மயப்படுதலுக்காக தனியான அமைச்சை நியமிக்கும் திட்டம் காணப்படுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இத்துறையில் நிபுணத்துவ மாணவர்களை ஒன்றிணைத்து இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்துடனேயே டிஜிட்டல் அமைச்சை ஸ்தாபிப்பதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர்; அரச சேவையில் அதிகமான பணிகளை டிஜிட்டல் … Read more

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று..

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் டக்வட் லூவிஸ் கோட்பாட்டின் படி இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ … Read more

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது அவர் தனது வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் உறுதிப்படுத்தினார். இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. குறித்த சந்திப்பின் போது மகளிருக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு … Read more

மாகாண சபை பொறிமுறையை முறைப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றை துரிதமாக தயாரிக்குக

– மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறை வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய்வு– புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது– மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் … Read more

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

• விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை. • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது தொடர்பில் ஆராய்வு – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால … Read more

அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த … Read more