அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த … Read more

மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா தொலைத்தொடர்புக் கோபுரங்களை திருத்தம் செய்தல்

இலங்கை பொலிசுக்குச் சொந்தமான மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (21.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இத் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2024-2026 நடுத்தரக் கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் தேவையான நிதியை ஒதுக்கி குறித்த தொலைத்தொடர்புக் … Read more

திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள் நியமிப்பு

திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு நேற்று (21.10.2024)  நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  • தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர உத்தியோகத்தரான எச்.சீ.டீ.எல்.சில்வா அவர்கள் திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். • தற்போது பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க அவர்கள் 2024.11.06 அன்று ஓய்வு … Read more

அம்பாறை எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதி புனரமைத்தல்

அம்பாறை எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதிகளை (தும்பர வனவிடுதி) புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதிகளை நவீனமயப்படுத்துவதற்கான பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் மத்திய பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிகள் மூலம் பூர்த்தி செய்வதற்காக நேற்று (21.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உயரிய பயனைப் பெறும் வகையில் … Read more

அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு 

கேர்ணல் லாரா தெரேஸ் ட்ராய் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (அக் 21) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடியது.  வரவேற்பை தொடர்ந்து, பாதுகாப்புச் செயலர் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தா மற்றும் இலங்கைக்கான  அவுஸ்திரேலிய … Read more

இந்திய கடற்படை கப்பல் 'கல்பணி' இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல் (FAC), INS கல்பனி (T-75)  )அக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  வருகை தந்த இந்தியக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர் என்று SLN ஊடகம் தெரிவிக்கிறது.  49 மீட்டர் நீளமுள்ள கார் நிக்கோபார் வகையை சேர்ந்த இக்கப்பல் 70 பேரைக்கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது.  தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு 21ஆம் திகதி வெளியேற முன் கப்பலின் குழுவினர் … Read more

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதி..

2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கேர்ணல் லாரா தெரேஸ் ட்ராய் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக் 21) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தது. வரவேற்பை தொடர்ந்து, பாதுகாப்புச் செயலர் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தா மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கான … Read more

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (DGCSD) பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது நிகழ்ந்த காலமதுரையாடலில் முக்கியமாக CSD இன் செயல்பாடுகள் மற்றும் CSD ஈடுபட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.