ஒக்டோபர் 8 ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி..

இலங்கை பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ‘தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தொழிற் படையின் ஒரு பங்காளியாக இருந்து தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அரச பணி ஆற்றியவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளின் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.  ‘தேசிய ஓய்வூதிய தினம்’ என்பது பல தசாப்தகால அவர்களின் சேவைக்கான ஒரு … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 07ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை..

அரசியல் கட்சியில் இணையும் நபர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திருமதி மேனகா பத்திரன தெரிவித்தார். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பாக, தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் இரகசிய எண், கடவுச்சொல் மற்றும் OTP எண் போன்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று (05) மற்றும் இன்று (06) என இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது. இரு நாட்களும் (5ம் மற்றும் 6ம் திகதிகளில்) கிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கமின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் வழங்கி உறுதிசெய்தார்.  இலங்கைக்கான இந்தியத் துணைத் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றிலிருந்து (06) பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர்06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 06ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றிலிருந்து(06 ஆம் திகதி) பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் … Read more

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க இந்தியா உறுதியளிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று (ஒக்டோபர் 4) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். கலாநிதி ஜெய்சங்கர், செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக்கு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் உறுதியளித்தார். ” முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக … Read more

சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் விசா பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுவீடன் அரசாங்கம் கவனம்

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் திரு. ஜான் தெஸ்லெஃப் அவர்களுக்கும் இடையில் நேற்று (2024.10.04) பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.   இதன்போது புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு சுவீடன் … Read more

2024 உலக ஆசிரியர் தினத்திற்கு பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

2024 ஒக்டோபர் 5 அன்று அனுஷ்டிக்கப்படும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “Valuing teachers voices :towards a new social contracts for education ” என்ற கருப்பொருளில் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எதிர்கால உலகை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் இத்தகைய பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும். வளமான தேசம் மற்றும் அழகிய வாழ்க்கை என்ற எமது இந்தப் … Read more

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார். அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். தூதுவர்களை நியமிக்கும்போது, … Read more

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அமரபுர பீடத்தின் செயலாளரும் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களால் செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.   அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.   அதன்போது நாட்டின் … Read more