IMF பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று நேற்று (2024.10.4) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.   பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் வலய திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார … Read more

அலரி மாளிகை ஊடாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்கு..

2005 ஆம் ஆண்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையின் மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து அலரி மாளிகை ஊடாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தது. 19 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.   தற்போது, ​ அவ்வீதியின் புணரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் ஒரு திசையில் மாத்திரமே பயணிக்க முடியும். மறுபுறம் ஓடும் பகுதி பணிகள் முடிந்தவுடன் திறக்கப்படும்.

நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் … Read more

1400 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகம் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து நானூறு (1400) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு பொலிஸ் மத்திய … Read more

ஜனாதிபதிக்கும் IMFக்குமிடையில் இரண்டாம் நாளாகவும் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு இது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வுக்கு அமைவான எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் அதன்போது ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்ப்பதற்கான செயற்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய சந்திப்பின் போது ஜனாதிபதி, சர்வதேச நாணய … Read more

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்நாட்டுக்கு வருகைத்தர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இந்திய – இலங்கை உறவுகளை பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் … Read more

பாளுமன்றத் தேர்தல் – 2024 : வைப்புத்தொகை மற்றும் வேட்புமனு தாக்கல்

பாளுமன்றத் தேர்தலுக்காக 2024.10.04ஆம் திகதி வரை வைப்புத்தொகை மற்றும் வேட்புமனு தாக்கல் சையப்பட்டுள்ள விபரம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக் குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை…

ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிலிருந்து பணிகளை மீளத் தொடர அனுமதி..

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமுல்படுத்த உத்தியசிக்கப்பட்டிருந்த சில நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி முடிவடைந்திருப்பதனால், அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்துட்டங்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற பணிகளை மீளத் தொடர தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர். இதன்போது நினைவுச் … Read more

விவசாயத் துறையில் தொழில் வாய்ப்பு நிமித்தம் 2,330 இலங்கையர்கள்; இஸ்ரேல் பயணம்…

இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் விவசாயயத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரையிலும் 2,330 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில்புரிவதற்காகச் சென்றுள்ளனர். இதேவேளை, விவசாயத் துறையில் தொழில்வாய்ப்புக்கு தகுதி பெற்ற மேலும் 118 இலங்கையர்களுக்கு அண்மையில் (02) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இவர்கள் ஒக்டோபர் மாதம் 9, 10, 12 மற்றும் 13 ஆகிய … Read more