வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக நாம் பக்கபலமாக இருப்போம்

சம்பிரதாய அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று நேற்று (02) இலங்கைக்கு விஜயம் செய்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதன்படி, IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் … Read more

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – 2024.10.26 : எல்பிடிய பிரதேச சபை சட்ட ரீதியான அறிவித்தல்களை வெளியிடுதல் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு அடையாளமிடுவதற்கான திகதி தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடப்பட்டுள்ளது.

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசின் முழு ஆதரவு

-எமது நாட்டு இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார்.   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.   இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது … Read more

ஜனாதிபதிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

• ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு பாராட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு … Read more

கனேடிய உயர்ஸ்தானிகர் ,ஜனாதிபதியை சந்தித்தார்

–ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் IMF மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்க தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுர … Read more

எல்பிடிய பிரதேச சபை தேர்தல் : வாக்கெடுப்பு நிலையத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல்

2024.10.26ஆம் திகதி நடாத்தப்பட உள்ள எல்பிடிய பிரதேச சபை தேர்தலின் போது வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தவிர வேறு எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சீன தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

• கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முழுமையான ஆதரவளிப்பதாக உறுதி சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த … Read more

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள பொருளாதார வெளிப்படைத் தன்மையை பேண வேண்டிதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (02) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார். சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, … Read more

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது. இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. … Read more