பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது. இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. … Read more

பாராளுமன்றத் தேர்தல் – 2024 வைப்புப் பணம் கையேற்றல்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக ஒக்டோபர் 01 வரை 37 சுயேச்சை குழுக்கள் வைப்புப் பணம் செலுத்தியுள்ளன. அதற்கமைய, 2024.09.25ஆம் திகதி முதல் 2024.10.01ஆம் திகதி வரை மாவட்ட ரீதியாக வைப்பு பணம் செலுத்தியுள்ள சுயேட்சை குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு -டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இணக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை … Read more

ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்

2024.09.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திரு. துமிந்த ஹூலங்கமுவ பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராகவும் மற்றும் கலாநிதி. ஏ.ஏ.ஜே. பர்னாந்து பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிதொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கௌரவ சேவைஅடிப்படையில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக (30.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் உடன்பாடுதெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 41 ஆவதுஉறுப்புரையின் (01) ஆம் உப உறுப்புரையில் அதிகாரமளிக்கப்பட்டதன் பிரகாரம் அமைச்சரவையின் கருத்துக்களைக் கேட்டறிந்து தனது பணிக்குழாமினரை நியமிப்பதற்கானஅதிகாரம் ஜனாதிபதி ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2200 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவ பிரதேசத்தில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி கெகிராவ பலலுவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடையொன்றில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட இரண்டாயிரத்து இருநூறு (2200) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார். இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கெக்கிராவ பலலுவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த … Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துத்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார். 1966 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய அசகாவா, பல … Read more

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமை நியமனம்

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமையாற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ.நிலூசாபாலசூரிய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமனமிக்கப்பட்டுள்ளார். நேற்று (03.10.2024) நடைபொற்ற அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

ஜனாதிபதி மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு..

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்க தூதுவர், ஜூலி சாங் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் … Read more

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி (ஒக்டோபர் 08) வரை ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க தகுதியுடைய அனைவரின் விண்ணப்பங்களும் 2024 ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; பதவிக்கு திருமதி பி.எம்.டி நிலூஷா பாலசூரிய..

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எம்.டி நிலுஷா பாலசூரியவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக உடனடியாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய திரு. ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் … Read more