அரசியல்மயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தொழிலுக்காக மட்டுமன்றி நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பிள்ளைகள் தரமான கல்வியை பெறுவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை தடையாக இருக்கக்கூடாது. மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களின் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று (28) கொழும்பு … Read more

சிறுவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்.

உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் … Read more

பாராளுமன்றத் தேர்தல்- 2024 : அஞ்சல் வாக்காளர்களின் வசதி கருதி தேருநர் இடாப்புக்களை காட்சிப்படுத்தல்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்காளர்களின் வசதி கருதி தேருநர் இடாப்புக்டகளை காட்சிப்படுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு பின்வருமாறு..

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது 

புதிய அமைச்சரவை இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் முதன்முறையாக கூடவுள்ளது. அங்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது, அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்.

சர்வதேச சிறுவர் தினத்தன்று தேசிய மிருகக்காட்சிசாலையில் பல நிகழ்ச்சிகள்..

ஒக்டோபர் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் திணைக்களத்தனூடாக விசேட நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் தினத்தில் 12 வயதுக்ககு கீழ்ப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என்றும் அன்றைய தினம் மிருகக்காட்சிசாலையை பார்வையிடவரும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த  17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.  நெடுந்தீவு கடற்பரப்பின் தென் பகுதிக்கும் தலைமன்னார் கடற்பரப்பின் வட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 413 இந்திய மீனவர்கள் … Read more

OTP எண்ணை யாருடனும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் நேற்று (29) காலை மன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீன்பிடி படகுகள் உட்பட 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிப் படகுகுள்;; மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) … Read more

பாராளுமன்றத் தேர்தல் -2024 : அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்…

2024 பாராளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் அனைத்து அஞ்சல் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…        

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2024 : தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வு

2024 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கை பின்வருமாறு..