அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும்

ஊரடங்குச் சட்டம்; பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், பயணங்களை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்கள் வெளியடப்பட மாட்டாது என்று இலங்கை பெலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அதிதியாவசிய, மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும்போது தமது அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவு வெளியாகியுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 712,318 ஆகும்.

நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கத்தின் 2402/23 இற்கு அமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 06.00 மணி வரை நாடுபூராகவும் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்..

திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி சில நிமிடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 மற்றும் 6 ஆம் திகதிகள் வரை இடம்பெற்றது. மேலும், இந்த நாட்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் … Read more

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனம்….

எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்..

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 17,140,354 வாக்காளர்கள் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதன்படி, 9வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தன.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுற்றது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது. நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (21) காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இதுவரை 30% வாக்களிப்பு

தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு முடிந்தவரை சென்று தமது வாக்குகளை வழங்குமாறு திகாமடுல்ல தெரிவத்தாட்சி அலுவலர் சித்தக அபேவிக்ரம தமது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பிற்பகல் 4 மணியுடன் வாக்களிப்பு செயற்பாடுகள் நிறைவடைய உள்ளதுடன் இறுதி கட்டம் வரை காத்திருக்காது வாக்குகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கும் தமது வாக்குகளை அளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாளர் ஒருவர் அவசியமாயின் அதற்கான உதவியாளரை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவித்த … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை 23.36 சதவீதம் வாக்களிப்பு..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார். இதனடிப்படையில், கல்குடா தொகுதியில் 28,668 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 55,089 வாக்குகளும், பற்று தேர்தல் தொகுதியில் 21,297 வாக்குகளும் அளிக்கப்பட்டடுள்ளன. இவற்றில் அதிகளவு மக்கள் வாக்களித்த தொகுதியாக மட்டக்களப்பு தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . .

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலக்கம் 13 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை,கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய 4 பிரிவுகளாக தேர்தல் இடம்பெறுகின்றது. 555,432 பதிவு செய்யப்பட்ட மற்றும் 26,778 தபால் மூலமும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தற்போது 99.98 தபால் மூல வாக்குகளை அளிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்கிரம ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் … Read more