வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கெண்ணும் வளவுகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவது சம்பந்தமாக…

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவதையும், அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வாக்காளர்களுக்கும், பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

உடல் வலிமையிழப்பிற்குட்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்

ஜனாதிபதி தேர்தலின் போது உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித அசெளகரியங்களும் இன்றி தமது வாக்கை அடையாளம் இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக வசதிகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புஇன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவடைய உள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை 712,318 ஆகவும் உள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதுடன், 1,713 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவும் உள்ளன.

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் … Read more

2023/2024 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z) வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதற்கினங்க வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று … Read more

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கெண்ணும் வளவுகளுக்கும் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு வருவது தடை..

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை கொண்டு வருவதும் அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

மலையக சமூகத்தினருக்கான 'மலையக சாசனம்'

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ‘மலையக சாசனம்’ வெளியீட்டு நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. நுவரெலியாவில் நடைபெற்ற இம் மலையக சாசன வெளியீட்டு நிகழ்வில், புத்தி ஜீவிகள், சட்டத்தரனிகள், பேராசிரியர்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள், சிவில் அமைப்பினர்கள், வர்த்தகர்கள், துறைசார் ஆர்வலர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழ் (மலையக தமிழர்) பெருந்தோட்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 வது ஆண்டு … Read more

சனாதிபதித் தேர்தலில் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு

நாளை (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யில் வைத்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (20.09.2024) நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இக் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் … Read more

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

• நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டதாக விரைவில் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கும். • அனைவரின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்- ஜனாதிபதி. தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து விடுபட்டது தொடர்பான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்தவுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான துரித திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். … Read more

நாளை (21) வழமை போன்று புகையிரதே சேவை நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நாளைய தினம் (21) புகையிரத சேவை வழமை போல் செயற்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார். தேர்தல் தினத்தன்று புகையிரத சேவையின் செயற்பாடு தொடர்பாக அரசாங்க உத்தியோகபூர்வ செய்தி இணையதளத்திற்கு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி நாளை சனிக்கிழமை சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் அனைத்து புகையிரதப் பாதைகளில் வழமை போன்று செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகேன மேலும் … Read more