புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் – பரீட்சை ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாம் பகுதி நடைபெறவுள்ளதுடன், அதே தினம் காலை 11.15 மணி முதல் … Read more

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக பரப்பப்பட்டு வரும் பொறுப்பற்ற செய்திகள் தொடர்பாக..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொறுப்பற்று செய்திகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…  

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 2024.09.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும்

2024.09.21 திகதி அன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிடயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் 2024.09.20 (வெள்ளிக்கிழமை ) மூடப்பட்டிருக்கும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பிரதான அலுவலகம் (ஆ) கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியின் இலக்கம் 6 மற்றும் 7 பிரிவுகளுக்கான வாக்கெடுப்பு மத்திய நிலையமாக வருத்தமான அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1981 ஆம் ஆண்டு 15ஆம் … Read more

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தில் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பாட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்குத் தயார்….

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி அவசர அனர்த்த நிலை ஏற்பட்டால் அந்தத் தடங்கலை முடிந்த வரை நிவர்த்தி செய்து வாக்காளர்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் வசந்த குணரத்ன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று (12) இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட அனர்த்த முகாமைத்துவக் குழுவினருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது சப்ரகமுவ மாகாணக் கல்விச் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, … Read more

சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்

சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று முன்தினம் (11/09/2024) ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம் – 2024 நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான நேபாள நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், … Read more

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் 1 வது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

2380 இலக்கம் கொண்ட 2024.04.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினால் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி தனித்தனியாக நடாத்தப்பட்ட மூன்று பரீட்சைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் I வது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மேற்படி பரீட்சைகளுக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் தமது தனிப்பட்ட பெறுபேறுகளை … Read more

ஜனாதிபதி தேர்தல் – 2024 : வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுதல் என்ற தப்பெண்ணத்தைக் களைத்தல்

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்படுகின்றதா என்பது குறித்த கேள்வி மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளதாக சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை தெளிவுபடுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது….      

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

இன்றைய தேசிய சிறைக் கைதிகள் தினத்தை (12) முன்னிட்டு ஜனாதிபதி விசேட மன்னிப்பு…

தேசிய சிறைச்செய்திகள் தினம் தினத்திற்கு (12) சிறைக் கைதிகள் 350பேருக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 34-வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை பார்வையிடுவதற்கு வரும் உறவினர்களுக்காக இன்று விஷேட திறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார்

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 48ஆம் இலக்க … Read more