வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் தூதரகத்தினரால் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வியட்நாம் தூதுவர் Trinh Thi Tam தலைமையில் 29 அன்று கொண்டாடப்பட்டப்பட்டது இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டார். கடற்றொழில் அமைச்சர் இலங்கை மற்றும் வியட்னாம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் பொருளாதார தொடர்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் விஷேட செய்தியை இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் … Read more

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்..

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி மதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது. இச் சிறுவர் வார்ட் அதிநவீன வசதிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை … Read more

யாழ் இந்திய துணைத்தூதுவர் – கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்களிடையில் சந்திப்பு

யாழ் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனை நேற்று 04) மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அரச உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் ஆளுமை திறன்களை விருத்திசெய்யும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பயிற்சித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை இழக்காத வகையில் தமது வாக்கினை பயன்படுத்த விடுமுறை…

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை….

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பிரதி உபவேந்தராக பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமனம் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக பல் மருத்துவ பீடத்தின் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உள்ளக தர பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.   முன்னாள்  பிரதி உபவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உபவேந்தராக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட பதவிக்காகவே பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். 1997 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் பல் மருத்துவ பட்டத்தைப் … Read more

2025 ஜனவரி 01 முதல் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

நிதி அமைச்சின் ஊடாக பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரினதும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு- ஜனாதிபதி. அனைத்து பரிந்துரைகளும் IMF உடனான உடன்படிக்கைக்கு அமைவானதாகவே உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.எந்தவித சந்தேகம் தேவையில்லை. அடிப்படைச் சம்பளம் 24% முதல் 50%-60% வரை அதிகரிக்கும். ஓய்வூதியதாரிகளுக்கு சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்-நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன. 2025 ஜனவரி 1 ஆம் … Read more

பாடசாலை மாணவர்களுக்காகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தேசிய போசாக்குக் கொள்கை…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) இன் கீழ் முன்வைத்த தேசிய போஷாக்கு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த திட்டம் அவசியம் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இதுவரை அவசியமான வகையில் தேசிய போசாக்கு கொள்கை ஒன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more

கொழும்பு மாவட்டத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன…

கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பிரசன்ன கிணிகே கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (04) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்; தற்போது கொழும்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து நான்கு மணி வரை தேர்தலுக்கு அவசியமான சகல அதிகாரிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்காக பயிற்றுவிக்கும் செயற்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் … Read more

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து … Read more