உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபை, தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்
2024.08.26 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களை கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலப்பகுதி 2024.08.26 முதல் 2024.09.13 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையவுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..