பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம்

2024ஃ25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்குப் போட்டி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் பயிரிடப்படும் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்ரெயார்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு ரூபா 15,000/- வீதம் நிதியுதவியை கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது … Read more

ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றமாகும் 

ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றம் எனவும் தற்பொழுது உலகில் காணப்படும் மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக முறைமை பாராளுமன்ற முறைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஒரு நாட்டில் பாராளுமன்றம் இருப்பதன் தேவையை குறிப்பிட்ட சபாநாயகர் மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாடசாலைகளை விருத்தி செய்யும் விதத்தை சுட்டிக்காட்டினார். சபாநாயகரின் தலைமையில் மற்றும் அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் பழைய மாணவியான பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம்

கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மண்ணெண்ணை மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை நேற்று (21.08.2024) அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், குறித்த தீர்மானத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சிபார்சுக்கு … Read more

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (22ஆம் திகதி) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா … Read more

2024 இன் முதல் 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   ‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் இன்று (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலீட்டு … Read more

ஆஸ்துமா (மூச்சிரைப்பு) நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையுடன் இரவு நேரத்தில் மற்றும் காலை வேளையில் ஏற்படும் குளிரான காலநிலையினால் சிறுவர்களுக்கு ஆஸ்துமா (மூச்சிரைப்பு) நோய் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கவனத்திற்கொண்டு சிறுவர்களை ஆஸ்துமா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்தியர் நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு நேற்று (20) இது தொடர்பாகக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிறுவர்களுக்கிடையே இருமல், சுவாசிப்பதற்கு சிரமப்படுதல், இரவு நேரத்தில் காணப்படும் … Read more

அரசாங்க உரக் கம்பனிக்கு கடந்த வருடத்தில் 433 மில்லியன் இலாபம்

இதுவரை இரண்டாகக் காணப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான உரக் கம்பனிகளான இலங்கை உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகியவை 2024ஆம் ஆண்டிலிருந்து அரசாங்க உரக் கம்பனி (State Fertilizer Company) எனும் பெயரில் ஒன்றிணைக்கப்பட்டதுடன், அக்கம்பனி கடந்த வருடத்தில் என்றுமில்லாதவாறு அதிக இலாபம் ஈட்டியுள்ளதாக அவ்வுரக் கம்பனிகளின் தலைவர் பேராசிரியர் ஜகத் பெரேரா தெரிவித்தார். அரசாங்க உரக் கம்பனியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இம்முறை சிறுபோகம், மற்றும் எதிர்வரும் பெரும் போகம் என்பவற்றில் உர விநியோகம் … Read more

பந்துலலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பந்துலலால் பண்டாரிகொட அவர்கள் இன்று (21) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.   ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கௌரவ மனுஷ நாணயகார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து … Read more

பயிர் சேத இழப்பீட்டை ஒரு இலட்சமாக உயர்த்த அமைச்சரவை பத்திரம்

பயிர் சேத இழப்பீடாக தற்போது அரசாங்கத்தினால் இலவசமாக ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் 40,000 ரூபாவை ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்குமாறு பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். விவசாயப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (20) பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் விவசாய அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வறட்சி, வெள்ளம் மற்றும் … Read more

வெள்ள நிலைமை குறித்து மேலும் அவதானமாக இருங்கள் – நீர்ப்பாசன திணைக்களம்

பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பிரிவின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி ஜி.எஸ். சகுரா தில்தாரா தெரிவிக்கிறார். அதனடிப்படையில் புலத்சிங்ஹல, மதுராவல,பாலிந்தநுவர மற்றும் மில்லனிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இந்த பிரதேசங்களில் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை பயன்படுத்தும் மக்கள் இந்த நிலவரம் … Read more