பாராளுமன்றத் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

2024 பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 2024 பொதுத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார். இம்முறை தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவசியமாயின் சேவையில் … Read more

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் கிடைக்கப்பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமது நியமனத்தை மாற்றுவதற்கு அல்லது இரத்துச்செய்வதற்கு முடியாது என்றும், தேர்தல் பணிகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். ஏனெனில், தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமக்கு … Read more

உங்களின் பெறுமதியான வாக்கை சரியான முறையில் எவ்வாறு அளிப்பது?

வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க விளக்கமளித்துள்ளார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டுக்கள் இரண்டு முறையில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் .ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். வாக்காளர் ஒரு … Read more

வாக்களிக்க வரும்போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு 

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக தமக்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் போது, பின்வரும் ஆளடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ள அமைதி காலப்பகுதி

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு (48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 2024.11.11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:  

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘INS வேலா’ கொழும்பு வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான INS வேலா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.  67.5 மீட்டர் நீளமுள்ள INS வேலா நீர்மூழ்கிக் கப்பல் 53 பணியாளர்கள் கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மதுபான விற்பனை நிலையங்கள் 02 நாட்களுக்கு மூடப்படும்

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என்று இலங்கை மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட (03 stars) 3 நட்சத்திர வகைப் பிரிவுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும், மதுபானங்களை விற்பனை … Read more

பாராளுமன்ற தேர்தல் –  நாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை (13) முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் நேரில் விஜயம்

கிழக்கு மாகாணத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறுகம்பே பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கண்டறிந்தார். இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் … Read more

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவு

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிய வீடுகளுக்கு அஞ்சலில் விநியோகிக்கும் பணிகள் 2024.11.07 ஆம் திகதி முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை வெளிப்படுத்தி தமது வீட்டுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  … Read more