வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருங்கள்!  – நீர்ப்பாசனத் திணைக்களம்  எச்சரிக்கை

களுகங்கையின் உயர்ந்த பகுதிகளுக்கு 70மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சியுடன் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் ஜி.டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா தெரிவித்தார். கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையுடன் கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்தில் வெள்ள அபாயத்திற்கு உட்பட்ட பிரதேசமாக கங்கையின் தாழ்நிலப் பகுதிகளும் அத்தனகலு ஓயாவின் தாழ்ந்த பிரதேசங்களும் கருத்திற்கொள்ள கூடியதாகவும், இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர்  சுட்டிக்காட்டினார்.   அவ்வாறே … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் தொடர் மழை …

• மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 20ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

கடந்த இரண்டு ஆண்டுகளில் 35,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் கதவுகள் திறக்கப்பட்டன

• ஜனாதிபதி செயலகம் -துறைமுக நகரம் – மத்திய வங்கி – பாராளுமன்றம் உட்பட கொழும்பை சுற்றியுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களை பார்வையிட வாய்ப்பு. கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் மற்றும் தாமரை கோபுரம்,உட்பட கல்விக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு … Read more

ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகர் பதவி மனுஷ வுக்கு..

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மனுஷ நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் அதிக சம்பள உயர்விற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலளிப்பு…

“சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25000 ரூபா கொடுப்பனவே 3 வருடங்கள் முழுவதும் வழங்கப்படும். கனிஷ்ட தரத்திலான சேவையாளர்களுக்கும் ஆகக் குறைந்த சம்பளமாக 55000 ரூபா அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முடியும்.” அரசாங்க தகவல் திணைக்களத்தில் (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அரசாங்க சேவையின் அதிக சம்பள உயர்விற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர்; “அமைச்சரவை அனுமதி … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் மழை …

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் … Read more

ஜப்பானிலிருந்து இந்தியா வரையில் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும்

  ‘நோக்கம்’ பிரகடனம், இந்திய – இலங்கைக்கு இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவூட்டுவதுடன் நெருக்கமான எதிர்கால உறவுகளுக்கும் வழி வகுக்கும். உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை – ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் … Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார்  100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாண  ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார்  100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் எடுத்து கூறியதற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சுக்கு,  ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கமைய, சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக … Read more

ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி …

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஓகஸ்ட் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி … Read more