புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர போன்ற சில பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறிய ஆறு மற்றும் மகுர கங்கை வழிந்து ஓடும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடியதாக அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  களுகங்கையின் சிறிய ஓடை வழிந்தோடும் மேட்டுப்பகுதிகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய மழை வீழ்ச்சி காணப்படுவதாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் இந்த அனர்த்தம் ஏற்படலாம் என்ற முன்னறிவித்தலை நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ளது.  இதனால்  குடா கங்கை மற்றும் மகுரா கங்கை ஆகியவற்றை சுற்றியுள்ள தாழ் நிலப் … Read more

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன..

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடகங்கள் ஊடாகவும், முன்னெச்சரிக்கை முறைகள் ஊடாகவும் மக்களுக்கு தொடர்ந்து அறிவித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.      

விஷ்மி குணரத்ன ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சாதனை

விஷ்மி குணரத்ன  ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தை (16) பதிவு செய்து சாதனை படைத்தார். நேற்று இடம்பெற்ற பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் கொண்டுத்திருந்தார். இந்நிலையில், சமரிக்கு அடுத்ததாக இலங்கை மகளிர் அணிக்காக … Read more

தேர்தல் மற்றும் பிரச்சாரம் போன்றவை தொடர்பில் சட்டம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்   கோரிக்கை…

தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து (ஆகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த ஒரு வார காலம் ஜனநாயக நாடுகளில் தேர்தலில் போட்டியிடுபவர்களும் நாட்டின் நிருவாகமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பில் தேர்தல்  தொடர்பில் தனிச் சட்டம் என்பன காணப்படுகின்றன.  எனவே அவற்றை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல்.ரத்னாயக்க  (15) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு … Read more

பொதுத் தகவல் தொழல்நுட்பப் பரீட்சை (GIT) விடைத்தாள் பரீட்சகர்களுக்கான விண்ணப்பங் கோரல்

  பொதுத் தகவல் தொழல்நுட்பப் பரீட்சை (GIT) 2023,2023(2024) விடைத்தாள் பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன….      

தொற்றா நோய்களைத் தடுப்பதற்கு குழு ஒன்று நியமனம்

தொற்று நோய் இலங்கையில் முதன்மை பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இலங்கையில் இடம்பெறும் உயிர் இழப்புக்கள் 80% ஆனவை தொற்றா நோய்களினால் ஏற்படுவதாகவும் மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டார தெரிவித்தார். இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக பல தரப்பினரும் தலையிட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் பணிப்பாளர்  குறிப்பிட்டார்.  மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துகொண்ட போதே பனிப்பாளர் இந்த தகவலை வெளியிட்டார்.  மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் யோசனைகளை பின்பற்றி மாவட்ட ஒருங்கிணைப்பு … Read more

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட்17ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது … Read more

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம் – தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்

ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஊடக நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கத்தின் சகல அதிகாரிகளுக்கும் தான் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (15) ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஒழுங்கு விதிகளை மீறுவதற்கு எந்த ஒரு அதிகாரியும் ஆசைப்படாதவாறு சகல வேட்பாளர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் , தவறான ஊழல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள், விதிகளை மீறுதல் போன்றவை … Read more

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் செய்த், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை அண்மையில் (07) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சபாநாயகர் கேட்டறிந்துகொண்டார். பலஸ்தீனம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகருக்கு விளக்கிக் கூறினார். இக்கட்டான சூழ்நிலைகளில் … Read more

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோஹித ராஜகருணா நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஆர்.எம்.சோஹித ராஜகருணா இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய .நிஷ்சங்க பந்துல கருணாரத்ன,வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.