தேர்தல் காலத்தில் ஊர்வலம் செல்வதற்குத் தடை…

தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து (ஆகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த ஒரு வார காலம் ஊர்வலம் செல்வதற்குத் தடை விதிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம.ஏ. எல்.ரத்னாயக்க நேற்று (15) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவ்வாறான சட்ட விரோதமாக ஊர்வலங்களை நடாத்தினால், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். மேலும், பொலிஸாரின் அனுமதியுடன் … Read more

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுதல் சட்ட விதிகளை  பின்பற்றுமாறு கோரிக்கை  

 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுதல் சட்ட விதிகளை பின்பற்றுமாறு வேட்பு மனுத் தாக்கல் செய்த நிகழ்வின் போது உரையாற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க  கோரிக்கை  விடுத்தார்.   ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சட்டத்தின் 74 ஆவது சரத்தின் படி ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து (ஆகஸ்ட் 15 ஆம் திகதி) தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு பெறும் வரை வேட்பாளர் ஒருவரைத் தெரிவு … Read more

காங்கேசன்துறை நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை இன்று

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு இன்று (16.08.2024) காலை 10.00 மணிக்கு நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் பி.ப 02.00 மணிக்கு காங்கேசன்துறையினை வந்தடையவுள்ளது. காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்   யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (15.08.2024) பி. ப 03.00 மணிக்கு காங்கேசன்துறை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு ககலந்துரையாடப்பட்டது. இதற்கான  பூர்வாங்க ஏற்பாடுகள்  தொடர்பாக … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர  போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும். இதன்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த … Read more

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவு

”2024 ஆம் ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (16) வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதே வேளை,மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல்

அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல் தொடர்பாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும்

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவித்துள்ளது. புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்துக்கு குழுவின் அனுமதி மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்த சட்டமூலம் ஊடாக புதிய சட்டங்கள் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்குதல் ஒக்டோபர் இறுதியில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் … Read more

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 15ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி … Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 437 முறைப்பாடுகள் பதிவு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.14 பி.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.14 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 437 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பlட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் – 2024 : பெயர் குறித்த நியமனங்கள் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் அறிவித்தல்

சனாதிபதி தேர்தலுக்காக இன்று வைப்புப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் வேட்பாளர் ஒருவர் பெயர் குறித்த நியமனப்பத்திரத்தைக் கையளிக்கவில்லை. அதன்படி, இன்றைய தினம் கையளிக்கப்பட்ட 39 பெயர் குறித்த நியமனப் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ( இன்று) சனாதிபதியைத் தெரிந்தனுப்புவதற்காக வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் நாளாக பிரகடனம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more