பந்துல லால் பண்டாரிகொடவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி…
காலி மாவட்ட சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை…
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
காலி மாவட்ட சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை…
அரசாங்கம் எப்போதும் பொதுமக்களுக்கு வழங்க முடியுமான உயரிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முன்மொழிவில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.. நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர், உதய ஆர். செனவிரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட் நிபுணர் குழுவின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைய முன்வைக்கப்பட்ட … Read more
ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து இன்று (ஆகஸ்ட் 15) வேட்புமனுத்தாக்கலுக்கான இறுதித் தினம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம், பதவி உயர்வு, பரீட்சை நடாத்துதல், மற்றும் சேவை நீடிப்பு போன்றவை … Read more
பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய (06.08.2024) இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முக்கியமான முன்மொழிவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சன்ன ஜயசுமன தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது. வைத்திய அதிகாரிகளின் பணிச்சூழல் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் சிலவற்றை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்திருந்தது. தமக்கு வழங்கப்பட்ட பணிக்கு மேலதிகமாகப் பணியாற்றும் விசேட தர மருத்துவ அதிகாரிகள் … Read more
தனமல்வில பகுதியில் சிறுமியொருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டமை மற்றும் ஹம்பாந்தோட்டை சட்ட மருத்துவ அதிகாரியின் செயற்பாட்டுக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், தனல்வில பகுதியில் 2023ஆம் ஆண்டு முதல் 16 வயதுடைய சிறுமி ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டமை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடைய குற்றச்சாட்டுக்கு அமைய சட்ட மருத்துவ அதிகாரியினால் வய்மூலமாகவும், உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டமையைக் கண்டித்துள்ளது. பாராளுமன்ற … Read more
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று (15) காலை ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு யெ;வதற்கான ஜனாதிபதி தேர்தலில் இம்முறை 17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். விசேடமாக இம்முறை புதிதாக ஒரு மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 9 மில்லியன் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுனர். கடந்த 2029 ஆம் ஆண்டு நடைபெற்ற … Read more
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாட்டுக்குமான நட்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கிழக்கு மற்றும் மலையத்தில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமானுக்கு அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர் அரசு சார்பாக அழைப்பு விடுத்தார்.
13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் … Read more
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று (ஆகஸ்ட் 15) காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகியது. வேட்பாளர்கள் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல்கள் செயலகத்தில்; வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்கப்படும் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் போக்குவரத்து திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல்12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது … Read more