ஜனாதிபதி தேர்தல் – 2024 : பெயர் குறித்த நியமனங்களைக் கையேற்கும் வேலைத்திட்டம் – 2024.08.15

2024.09.21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 2024.08.14ஆம் திகதி மதியம் 12.00 மணி வைப்புப் பணம் செலுத்திய வேட்பாளர்கள் அனைவருக்கும் நாளை (2024.08.15ஆம் திகதி) பெயர் குறித்த நியமனங்களை கையளிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு வருகை தருவதற்கான அதேபோல், பெயர் குறித்த நியமனப்பத்திரங்களை கையேற்கும்போது அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவிற்காக வழங்கப்படும் பெறுமதி பல்வேறு சரிபார்க்கை தற்போது சேர்க்கப்பட்டு சகல அரச சேவை ஊழியர்களுக்காகவும் ஒவ்வொரு 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தும் அடிப்படையில் வாழ்க்கைச் செலவுப் படியாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்குவதற்கு நிதி, தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் … Read more

இலங்கை நுண்ணுயிரியலாளர்கள் கல்லூரியின் 33வது வருடாந்த விஞ்ஞான அமர்வு

இலங்கை நுண்ணுயிரியலாளர்கள் கல்லூரியின் 33வது வருடாந்த விஞ்ஞான அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வு நேற்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் கொழும்பு கிங்ஸ்பரி மண்டபத்தில் நடைபெற்றது. “செலவு குறைந்த, உயர்தர மருத்துவ நுண்ணுயிரியலை உணர்தல்” என்ற கருப்பொருளுடன், 2024 ஆண்டு அறிவியல் அமர்வு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன… இலங்கை … Read more

தலைமன்னாரில் கரை ஒதுங்கிய 208 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால், 2024 ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரை பகுதிகளுக்கு அருகில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், அந்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய சுமார் இருநூற்று எட்டு (208) கிலோ பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கப்பலில் தலைமன்னார் ஊறுமலை … Read more

மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடட்ட 09 பேர் கடற்படையினரால் கைது

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கிளிநொச்சி கடைக்காடு கடற்கரை பகுதியிலும் அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதியிலும் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்படி உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை … Read more

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம்

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது. இந்நாட்டின் பொருளாதார இலக்குகளை எட்டக்கூடிய வகையில் கல்வித்துறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த வலயத்தில் இலங்கையை கல்விக்கான கேந்திர நிலையமாக மாற்றுவோம் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். … Read more

நாளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (ஆகஸ்ட் 15) பாதுகாப்புக் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நேற்று (13) ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 09 மணி முதல் 11 மணி வரை கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்.. இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வது, அமைதியை பேணுதல், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என சில … Read more

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இயன் பெல்…

எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல்லை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் அவர் இலங்கை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ், இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறும்;, இந்த போட்டிகள் முடிவடையும் வரை இயன் பெல் இலங்கை … Read more

அரசாங்க சேவைக்கு போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே ஆட்சேர்ப்பு செய்யப்படும்..

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்க … Read more

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.13 பி.ப 04.30 வரை) பதிவான தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.13 பி.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 42 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.13ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 408 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.