“பசுமை தேசம்” தேசிய வீட்டுத்தோட்ட திட்டத்தில் இணைந்து கௌரவ பிரதமர் அலரி மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டினார்

‘பசுமை தேசம்’ தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் -2022 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை குறிக்கும் வகையில் இன்று (29) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ரராஜபக்க்ஷ அவர்கள் மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டிவைத்தார். காலை 9.18 மணியளவிலான சுப வேளையில் பலா மரக்கன்றொன்றை கௌரவ பிரதமர் நட்டு வைத்தார். நச்சுத்தன்மையற்ற சத்துக்கள் நிறைந்த புதிய காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகளை தங்கள் சொந்த வீட்டு தோட்டங்களில் இருந்து பெற்று, அதன் மூலம் ஆரோக்கியமான … Read more

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும் சந்தர்ப்பம் முதல் கப்பலில் இருந்து இறக்கப்படும் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிறுவனங்கள் சிலவற்றினால் சம்பந்தப்பட்ட எரிபொருளின் தரம் பரிசோதனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார். எந்தவொரு நிறுவனத்திலும் எரிபொருள் வகைகளின் தரம் குறித்த பிரச்சினை பதிவாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். சில ஊடகங்கள் இதுதொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் … Read more

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்காத பொருட்கள் சூழலில் சேர்க்கப்படுகின்றன

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த உக்காத பொருட்களால் நிலம் மற்றும் நீரிலுள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார். இதுதொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், உயிரினங்களின் நலனை பொருட்படுத்தாமல் ,திறந்த வெளியில் இவற்றை வீசுபவர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த செயல்முறையை எளிதில் நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு … Read more

மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை, உதுமான் வித்தியாலய முற்றலில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு தீர்ப்பாளர்களாக ஆர்.எம்.புகாரிஇ ஏ.எல்.யாசீன் ஆகியோர் கடமையாற்றியதோடுஇ அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசியப்பாடசாலை) மாணவர்கள் நடுவர்களாகக் கடமையாற்றினர்.  

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும்… சவூதி தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்தார். தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு இந்நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். ஹுசைன் அல் ஹார்தியின் பதவிக்காலத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் … Read more

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா வரவேற்கிறது

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களை மார்ச் 28ஆம் திகதி சந்தித்திருந்தார். 2.         மார்ச் 25ஆம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றிருந்த சந்திப்பு உள்ளிட்ட அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேராளர்களால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரங்கள், காணாமல்போனோர் விவகாரங்கள், 13ஆவது … Read more

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மாதம்பே, கடுபொத, தங்கல்ல, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பிரதேசங்களில் இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவர். இதேவேளை, ஹொரபே புகையிரத நிலையதத்தில் வைத்து புகையிரதயத்துக்கு ஏற முற்பட்ட ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததனால்  ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயிர் செய்கைக்கு பயன்படுத்தாத காணிகள், பசுமை வீட்டு தோட்ட வீட்டுப்பயிர்ச்செய்கைக்கு ……..

இதுவரையிலும்,  விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத பல காணிகள் அரச நிறுவனங்களின் கீழ் காணப்படுகின்றன. அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம் – 2022’ என்ற திட்டத்திற்காக இந்த காணிகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள்பட்டுள்ளது இது தொடர்பான அனைத்து தகவல்களும் காணி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர்; எஸ். எம் சந்திரசேன கூறினார். ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம்; – 2022’  தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற … Read more